god-says-trust-me

கர்த்தர் “என்னை நம்பு” – யோவான் 14: 1– இயேசு இந்த உலகத்தை விட்டு போக போவதினால் சீஷர்களின் இருதயம் கலங்கியது. இவ்வளவு நாட்கள் இயேசுவோடு நடந்து, பேசி, சிரித்து,தங்கள் கவலைகளையும், சந்தோஷங்களையும் இயேசுவோடு பகிர்ந்து கொண்டனர். ஆனால் இயேசு உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக என்றார். நண்பனே, உங்கள் இருதயம் உங்களது எதிர்காலம், உங்கள் பெற்றோர்,உஙகள் பிள்ளைகள் (அ) உங்கள் வேலையை நினைத்து கவலைபடும் போது. இயேசு உங்களோடு தனிபட்ட முறையில் சொன்ன இந்த வார்த்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள் – ”என்னை நம்பு”. உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்தி,அவருடைய மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள இயேசுவை நம்புவீர்களா?

faith-lessons

விசுவாச பாடங்கள் – யோவான்13: 37-38b – இயேசுவிடமிருந்து என்ன விசுவாச பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்.1) இன்றைய விசுவாசத்தில் கவனமாக இருப்போம் – பேதுரு இயேசுவிற்காக மரிக்க பெரிய திட்டத்தை வைத்திருந்தான். ஆனால் இயேசு அன்றைய இரவிற்கு, பேதுருவின் விசுவாசத்திற்காக ஜெபித்தார்.2) விழுந்துபோன ஜனங்களுக்காக உதவி செய்வது – தோல்விக்கு பிறகு, பேதுரு விசுவாசத்தில பலவீனமானவர்களை பலப்படுத்த வேண்டுமென இயேசு விரும்பினார். நமது ”விசுவாச தோல்வி” பிறரை பலப்படுத்த பயன்படுத்தபட வேண்டுமென இயேசு விரும்புகிறார். அநேக வருடங்களுக்கு பிறகு, பேதுரு இயேசுவிற்காக சிலுவையில் தலைகீழாக அடிக்கப்பட்டு மரித்தார்.

faith-attack

விசுவாச தாக்குதல் – யோவான்13: 37-38a – பேதுரு இயேசுவிடம் – நான் உமக்காக மரிப்பதற்கு தேவையான விசுவாசம் என்னிடம் இருக்கிறது என்றான். ஆனால் சாத்தான் பேதுருவின் விசுவாசத்தை தாக்க விரும்பினான். பிசாசு எப்படி தாக்குவான்? 1) பேதுரு தனது சொந்த விசுவாசத்தின் மேல், தன்னம்பிக்கை உள்ளவனாக மாறினான். 2) அவன் தனது விசுவாசத்தை மற்றவர்களோடு ஒப்பிட்டு – ”மற்றவர்கள் இடறினாலும் நான் இடற மாட்டேன்”என்றான். பிலிப்பியர் 3: 3– ”நம்முடைய மாம்சத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல் இயேசுவின் மேல் வைப்போம்”. அப்பொழுதுதான் தற்பெருமை, ஒப்பிட்டு பார்க்கும் மனபான்மை போன்ற ஆவிக்குரிய தாக்குதல்களை நம்மால் மேற்கொள்ள முடியும்.

not-now-but-later

இப்பொழுதில்லை, பின்பு – யோவான்13: 36 – இயேசு பேதுருவிடம் நான் இப்பொழுது போகிற இடத்திற்கு நீ வரக்கூடாது என்றார். அநேக நேரம் காரியங்கள் உடனடியாக நடக்க வேண்டுமென நாம் நினைக்கிறோம். எப்படி கதவை தொட்டவுடன் உடனே அது திறக்கிறதோ அதேபோல். ஆனால், கர்த்தரே நமது வாழ்க்கையின் ஆசிரியர், அவருக்கு ஒரு சிறிய காரியம் கூட விரிவாக தெரியும். கர்த்தரின் வாக்குதத்தங்கள் நிறைவேற நாம் காத்திருக்க வேண்டும். ஆபிரகாம் 25 வருடங்கள் காத்திருந்தான். எபிரேயர் 6: 15 ஆபிரகாம் பொறுமையோடு காத்திருந்து வாக்குதத்தம் பண்ணப்பட்டதை பெற்றான். கர்த்தருடைய வாக்குதத்தை பெற்றுக்கொள்ள பொறுமையாக இருக்கிறோமா?

the-mark-of-a-christian

கிறிஸ்தவர்களின் அடையாளம் – யோவான் 13: 34-35b – நாம் ஆலயத்திற்கு போவதாலோ (அ) சிலுவையை அணிவதாலோ ஜனங்கள் நம்மை கிறிஸ்தவர்கள் என தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் பிறர் மீது செலுத்தும் அன்பினால் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். நீங்கள் உங்கள் மனைவியை குற்றஞ்சாட்டாத போது, ஒரு கோபகார சகோதரரிடம் நீங்கள் காட்டும் பொறுமை, காயப்பட்ட, பெலவீனமான மனிதர்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறை, பொறாமையான மனிதனிடம் உங்களது சாந்தம், குடும்பத்தினரிடமிருந்து வரும் அவமானங்களை சந்தோஷமாக சகிக்கும் போதும், ஜனங்கள் நீங்கள் கிறிஸ்தவர்கள் என தெரிந்து கொள்வார்கள்.

how-love-one-another

எப்படி ஒருவரிலொருவர் அன்பாயிருக்க முடியும்? – யோவான் 13: 34-35a – இங்கு இயேசு அவர் நம்மில் வைத்த அன்பை அனுபவித்தால் மட்டுமே நாம் பிறரை நேசிக்க முடியும் என்கிறார். ரோமர்2: 4 ல் நம் மேல் தேவன் வைத்துள்ள அன்பின் தகுதிகள் சிலவற்றை பார்க்கலாம். நீங்கள் தேவதயவை அனுபவிக்கவில்லையா? கர்த்தர் உங்களுக்காக சகிக்கவில்லையா? கர்த்தர் உங்களிடம் பொறுமையாக இல்லையா? தேவனிடமிருந்து இந்த தகுதிகளை அனுபவித்திருந்தால் மட்டுமே, என்னால் தயவுள்ளவனாக,சகிப்பவனாக மற்றும் பொறுமையானவனாக இருக்க முடியும். எப்படி ஒரு குழாய் தொட்டியிலிருந்து தண்ணீரை பெற்று அநேக ஜனங்களுக்கு கொடுக்கிறதோ அதே போல.

how-jesus-calls-you

இயேசு உங்களை எப்படி அழைக்கிறார்? – யோவான் 13:33 – இயேசு நம்மை”பிள்ளைகள்” என்று சொல்கிறார்.”பிள்ளை” என்று சொல்வதால் ஒரு சிறு குழந்தையை போல, நமக்கும் உதவியும், வழிகாட்டுதலும் தேவை. நான் அவரது குடும்பத்தில் ஒரு பகுதியாகிவிட்டேன் எனவே அவர் என்னை ”பிள்ளை” என அழைக்கிறார். நண்பனே, நமது இரட்சகரின் அன்பையும்,மென்மையையும் பாருங்கள். மேலும், நான் பரலோக இராஜ்ஜியத்திற்கு நுழைய வேண்டுமானால் என்னை ஒரு சிறு குழந்தையை போல மாற்ற வேண்டுமென இயேசு கேட்கிறார் (மத்தேயு 18: 3). நாம் இயேசுவிடம் வரும் போது நமது நடத்தை ஒரு குழந்தையை போல இருக்கட்டும். எப்படி ஒரு கண்திறக்காத சின்ன குருவி தாய் தரும் உணவை வாயை திறந்து ஏற்றுக்கொள்கிறதோ அதுபோல.

Silhouette of Jesus with Cross over sunset concept for religion, worship, prayer and praise.

இயேசு பிதாவை மகிமைபடுத்தினார் – யோவான்13:31-32 – இயேசு சிலுவையில் மரணத்தை சந்தித்த போதும் கூட தேவனை மகிமைபடுத்தினார். நமது கடினமான சூழ்நிலைகளிலும் கூட கர்த்தர் மகிமைப்படமுடியும். எ.கா- ஒரு கோபக்கார கணவரால் வருகிற பாடுகளை சந்தோஷத்தோடு சகிக்க தெரிந்த மனைவி மூலமாக கூட கர்த்தர் மகிமைபடுகிறார். உங்கள் முன்பாக என்ன கஷ்டமான சூழ்நிலையோ/நபரோ இருக்கலாம், அந்த/அவர் மூலமாக கர்த்தரின் நாமம் மகிமைபடமுடியுமா? இயேசுவைப் போல், எல்லா பிரச்சணைகளின் மத்தியிலும் நமது ஆத்துமா தேவனை மகிமைபடுத்த வேண்டுமென ஜெபிக்க முடியுமா?(எபிரேயர்12: 2).

how-satan-works

பிசாசு எப்படி கிரியை செய்கிறான் – யோவான் 13: 26-30 – வசனம் – 27 ல் அப்பத்தை வாங்கின பின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான் என பார்கிறோம். ஏற்கனவே இயேசுவை காட்டி கொடுப்பதற்காக யூதாஸ் பணத்தை வாங்கிவிட்டான் (மத்தேயு 26: 15). எனவே,சாத்தான் ‘யூதாசின் பணத்தாசையை, இயேசுவை காட்டிக்கொடுப்பதற்காக பயன்படுத்தினான். இன்றும் கூட ”பணத்தாசை” (பணம் மட்டுமல்ல) நமக்கும் தேவனுக்கும் நடுவாக பிரிவினையை கொண்டு வருகிறது. பணத்தாசையினால் வரும் 4 பக்க விளைவுகளை பார்க்க விரும்புகிறீர்களா? தயவு செய்து 1 தீமோத்தேயு 6: 9,10 ஐ படித்துவிட்டுஅந்த 4 பக்கவிளைவுகளை எனக்கு தெரியப்படுத்துங்கள் (எஸ்.எம்.எஸ்).

betraying-jesus

இயேசுவை காட்டி கொடுத்தல் – யோவான்13: 21-25 – இயேசுவோடு 3 வருடங்கள் இருந்து அவரோடு பேசி, சாப்பிட்டு, நடந்த சீஷர்களில் ஒருவன் அவரை காட்டிகொடுப்பான் என்றார். ஜெபம் செய்த பிறகு” நான் அவரை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன்” என்று சொல்லும் போது சில நேரங்களில் நான் இயேசுவை காட்டிகொடுத்துள்ளேன். இயேசு ஒருவர் மட்டுமே அவர் அதிகமாக நேசிக்கிற ஜனங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டவர். நமக்கு தெரிந்த, நம்மை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிற ஜனங்களையும் நேசிப்பதற்கு, தேவையான கிருபையை- நானும், நீங்களும் இயேசுவின் அன்பை பெற்றுக்கொள்ள தகுதியில்லாதவர்களாய் இருந்த போதும் நம்மை நேசித்த இயேசுவிடம் கேட்கலாமா? (ரோமர் 5: 8).

want-blessing

ஆசீர்வாதம் வேண்டுமா? – யோவான் 13: 16-20 – ”தெரிந்திருப்பதைவிட பிறருடைய கால்களை கழுவுகிறவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என இயேசு சொன்னார். இங்கு தெரிந்து கொள்வதற்கும், செய்வதற்கும் உள்ள வித்யாசத்தை இயேசு சுட்டிகாட்டுகிறார். யூதாஸ் அவரை காட்டிக்கொடுக்க போகிறானென்று இயேசுவிற்கு தெரியும். ஆனாலும், அவனுடைய கால்களை கழுவினார். உங்கள் வாழ்விலும் கூட நீங்கள் கஷ்டப்படுவதை பார்க்க சில ஜனங்கள் விரும்புவார்கள். நீங்கள் அவர்களை மன்னித்து, அவர்கள் தேவையோடு இருக்கும் போது அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறீர்களா? அப்படி செய்வீர்களானால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ரோமர் 12: 20, 21 ஐ படியுங்கள். இயேசுவைப்போல் தீமையை நன்மையினால் வெல்லுங்கள்.

wash-like-jesus

இயேசுவை போல் கழுவுங்கள் – யோவான் 13: 12-15b – 2 நிபந்தனைகள் 1) இயேசு என் அழுக்கான பாதத்தை கழுவினாரானால். 2) நான் அவரை என் போதகரும் ஆண்டவருமாக கருதுவேன். என் வாழ்வில் இந்த 2 நிபந்தனைகளும் உண்மையானால், இயேசு பிறரது அழுக்கான பாதத்தை கழுவ எனக்கு கட்டளையிடுகிறார். அதாவது நான் ஏழைகளுடனோ, படிப்பறிவில்லாதவர்களுடனோ (அ) பாவியான மனுஷனுடனோ என்னை ஒப்பிட்டு பார்த்து என்னைபற்றி உயர்வாக நினைக்கமாட்டேன். அதாவது கடினமானவர்களுக்கும், என்னை பிடிக்காதவர்களுக்கும் கூட, நான் எந்நேரமும்,யாருக்கும் ஊழியம் செய்ய தயாராக இருக்கிறேன். ஏன்? ஏனென்றால் இயேசு என் ஆண்டவர் அவர் எனக்கு ஊழியம் செய்ய வந்தார்.

waitingonthelord2

ஆண்டவரும் போதகரும் – யோவான் 13: 12-15a- இயேசு ”நீங்கள் என்னை போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்கிறீர்கள்” என்றார். இயேசு என் போதகர் என்றால் ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை பற்றியும், நம்மை பற்றியும் மற்றும் பிறரை பற்றியும் அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். இயேசு என் ஆண்டவர் என்றால் என் வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றிற்கும் அவரே தலைவர் என்று அர்த்தம். இப்பொழுது யோசித்து சில கேள்விகளுக்கு பதில் கொடுங்கள் முடிந்தால் எழுதிகொள்ளுங்கள். சமீபத்தில் இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? உங்கள் வாழ்வில் எல்லா பகுதியிலும் இயேசுவே தலைவராக (ஆண்டவராக) இருக்கிறாரா? இயேசுவிற்கு பதிலாக நீங்கள் ஏதாவது பகுதியில் தலைவராக இருக்கிறீர்களா?

washed-by-jesus

இயேசுவால் கழுவப்படுதல் – யோவான் 13: 8-11 – இயேசு”நான் உன்னை கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்கு பங்கில்லை”என்றார். பேதுருவைப்போல, நான் இயேசுவால் கழுவப்பட வேண்டும். ஆனால் பேதுருவைப்போல, இயேசு என்னை கழுவுவதற்கு நான் அனுமதிக்க வேண்டும். ”இயேசு நமது எல்லா அநீதியையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறார்” என யோவான் எழுதுகிறார். நீங்கள் செய்த ஏதாவது பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்யவில்லை என உணர்வீர்களானால், இன்றே உங்களை அதிலிருந்து கழுவும்படி அவரிடம் கேளுங்கள். இயேசு சீஷர்களின் பாதத்தை தொட்டு கழுவினார். இயேசுவின் சுகமாக்கும் தொடுதலினால், என்னுடைய இருதயமும் சுத்தமாக வேண்டுமென விரும்புகிறேன்.

who-is-wiser

யார் புத்திசாலி? – யோவான் 13: 6- 8 -பேதுரு இயேசுவிடம் “நீர் என் கால்களை கழுவலாமா?” என கேள்வி கேட்டான். ஆனால் இயேசு இப்பொழுது நீ அறியாய், பிறகு அறிந்து கொள்வாய் என்றார். உங்களுக்கும் கூட இப்பொழுது என் வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என கேள்விகள் இருக்கலாம். ஆனால் இயேசு அதற்கான பதிலை பிறகு வெளிப்படுத்துவார். இயேசுவின் ஞானத்தை நம்பி, அவர் நம்மை கழுவ அனுமதிப்போம். “ஏன் ஆண்டவரே” (அ) ”வேண்டாம் கர்த்தாவே” என நாம் பேதுருவை போல் சொல்லலாமா? நாம் இப்படி ஜெபிப்போம் – கர்த்தாவே, நீர் என்னிலும் அதிக ஞானமுள்ளவர். உமது திட்டங்களையும், நேரங்களையும் ஏற்றுக்கொண்டு விசுவாசமுள்ளவனாக இருக்க உதவும்.

want-to-be-great

பெரியவனாக விரும்புகிறாயா? – யோவான் 13: 3-5 – சீஷர்கள்”யார் மிகவும் பெரியவன்?” என வாதிட்டனர். இந்த உலகத்தின் பார்வையில் யார் மேன்மையானவர் – முதல் வருகிறவர், அதிகமாக பணம் சம்பாதிக்கிறவர், அழகாயிருக்கிறவர் மற்றும் அதிக புத்திசாலி. ஆனால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் வேலைக்காரருடைய பாதத்தை தலைவர் கழுவுகிறார். அங்கு யார் முதலாவது (அ) யார் பெரியவன் என பேசுவதற்கோ (அ) நினைப்பதற்கோ இடமில்லை. மிகவும் பெரியவராக வேண்டுமென விரும்புகிற ஜனங்களால் நாம் சூழப்பட்டுள்ளோம். கர்த்தர் உங்களை இந்த உலகத்தில் ஊழியராக அனுப்பி இருக்கிறார். எனவே,பிறருடைய கால்களை கழுவ நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

satan-entered-the-mind

பிசாசனவன் மனதில் நூழைந்தான் – யோவான்13: 2 – இங்கு இயேசுவை காட்டிக்கொடுக்கும்படி பிசாசனவன் யூதாசின் மனதை தூண்டினான் என கூறப்பட்டுள்ளது. இன்றும் கூட,பலவீனமான மனதை சாத்தான் தனக்கு சாதகமாக்கி கொள்கிறான். அவனது சித்தத்தை நிறைவேற்ற ஜனங்களை பயன்படுத்துகிறான். எபேசியர் 4: 27 – நாம் கோபப்படுவதால் பிசாசிற்கு சந்தர்ப்பம் (இடம்) கொடுக்கிறோம் என்கிறது. சாத்தான் நமது பலவீனத்தின் மூலம்,நம்முடைய உறவுகளில் குழப்பத்தை உண்டாக்கி,நமது இருதயத்தின் சமாதானத்தை அழிக்க சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான். யாக்கோபு 1:20 – மனுஷனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடபிக்க மாட்டாது என சொல்கிறது.

true-love

உண்மையான அன்பு – யோவான் 13: 1 – இயேசு முடிவுபரியந்தம் அவர்களிடத்தில் அன்பு வைத்தார். முடிவு என்றால் என்ன? திருமணத்தின் போது மணமக்கள் ”மரணம் நம்மை பிரிக்கும் வரை” என வாக்கு கொடுப்பர். ஆனால், கிறிஸ்து நம் மேல் கொண்டுள்ள அன்பு நாம் கற்பனை செய்ததற்கும் மேலானது. சங்கீதம் 73: 25 ல் தாவீது ”பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? இந்த உலகத்தில் உம்மை தவிர எனக்கு வேற விருப்பமில்லை”என்றார். கவலையை விட்டு, பயத்தை விட்டு, சந்தேகத்தை விட்டு கிறிஸ்துவை நம்புவோம். ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் அவரது மகா அன்பினால் சூழப்பட்டுள்ளோம் (எபேசியர் 2: 4, 3: 18). அன்பு நம்மை மாற்றட்டும்.

tongue-that-listens

கவனிக்கும் நாவு – யோவான் 12: 49-50 – ”பிதா என்னை என்ன பேச சொல்கிறாரோ அதையே நான் பேசுகிறேன்” என்றார் இயேசு. கர்த்தர் தந்த ”நாவு” என்னும் அற்புதமான பரிசை நான் எப்படி பயன்படுத்துகிறேன். என் நாவு கர்த்தரின் வழிகாட்டுதலை கவனிக்கும்போது, எனது பேச்சு ஆறுதலாகவும், சமாதானத்தை கொண்டுவருவதாகவும், வீண் பேச்சை தவிர்ப்பதாகவும் இருக்கும். நாம் கர்த்தரின் வழிகாட்டுதலை கவனிக்க நேரம் தேவைபடுவதால், பேசுவதற்கு தாமதியுங்கள். கர்த்தருக்கு இன்று அவரை துதிப்பதற்கு மட்டுமல்ல, கர்த்தர் தெரிந்தெடுத்த வார்த்தைகளை பேசுவதற்கும் நாவுகள் தேவைபடுகிறது. இன்று, யாக்கோபு 3: 5-9 ஐ சிறிது நேரம் செலவழித்து கவனியுங்கள்.

words-of-life

ஜீவனுள்ள வார்த்தைகள் – யோவான்12: 47-48 – ”என்னுடைய வார்த்தைகளே கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்” என்றார் இயேசு. யோவான் 6: 63 ல் ”நான் உங்களுக்கு சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது” என இயேசு சொல்கிறார். இயேசுவினுடைய ஒவ்வொரு வார்த்தையின் நோக்கமும், வாசிப்பது, மனப்பாடம் செய்வது, படிப்பது மற்றும் விவாதிப்பது மட்டும் அல்ல; முழு இருதயத்தோடும் அதற்கு கீழ்படிவதாகும். ஒரு படிப்பறிவில்லாத மனிதன் தன் உறவினர்கள் தன்னை இழிவாக பேசும் போது கோபப்படாமல் இருந்ததை நான் கவனித்துள்ளேன். ஏனென்றால், அவனுடைய இருதயத்திலும், நடத்தையிலும் இயேசுவின் வார்த்தைகள் வேறூன்றி உள்ளது. கர்த்தாவே, உமது எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்படிவதற்காக எனது விருப்பத்தை நான் உமக்கு அர்பணிக்கிறேன்.

give-what-you-receive

நீங்கள் பெற்றுக்கொண்டதை கொடுங்கள் – யோவான் 12:46 – இயேசு”என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற ஒருவரும் இருளில் இருப்பதில்லை”என்றார். இயேசுவின் ஒளி என்னில் பிரகாசிக்க அனுமதிக்கவில்லை என்றால், நான் இன்னும் இருளிலே இருப்பேன். எ.கா- என்னால் சிலரை மன்னிக்க முடியாத போது, நான் இன்னும் இருளிலே இருக்கிறேன். ஆனால், இயேசுவை (ஒளி) என் வாழ்வில் அனுமதிக்கும் போது, எப்படி என்னால் மன்னிப்பற்றவனாக இருக்க முடியும். எப்படி என்னால் ஒவ்வொரு நாளும் என் நடத்தை மேல் உள்ள; கர்த்தரின் அன்பையும், தயவையையும், நீடிய பொறுமையையும் மறக்க முடியும். ஜெபித்து ரோமர் 2: 4 ஐ தியானம் செய்யுங்கள்.

look-and-be-saved

பாருங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் – யோவான் 12;44-45 – இயேசு ”என்னை காண்கிறவன் என்னை அனுப்பினவரை காண்கிறார்” என்றார். கவனிப்பது (அ) கவனமாக பார்ப்பது என்பதின் அர்த்தமே ”காண்பது” என இந்த வசனத்தில் சொல்லபட்டுள்ளது. நீங்கள் இயேசுவின் வாழ்க்கையை கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் இயேசுவை விசுவாசிக்கும் போது, உங்கள் பலவீனங்களை அவரது பலமாகவும், உங்கள் பாவங்களை அவருடைய நீதியாகவும், உங்கள் துக்கங்களை அவரது சமாதானமாகவும் உங்களால் மாற்ற முடியும். ஏசாயா 44: 22 ”என்னை நோக்கிபாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்” என்கிறது. இன்று, தவறான இடத்தில் சமாதானம், பலம் மற்றும் பரிசுத்தத்தை தேடுகிறீர்களா என ஜெபித்து உங்களையே பரிசோதனை செய்து பார்ப்பீர்களா?

who-do-you-value-more

நீங்கள் யாரை அதிகமாக மதிக்கிறீர்கள்? – யோவான் 12: 42-43 – மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயமே ஜனங்கள் இயேசுவை பின்பற்றாததற்கு 3 வது காரணமாகும். அவர்கள் ஜனங்களின் சம்மதத்தை பெற விரும்பினர் (குடும்பம்,நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள்). இயேசுவின் மகா அன்பின் உறவை அனுபவப்பதிலிருந்து ஜனங்களின் கருத்துக்கள் உங்களை பின்னுக்கு இழுக்கிறதா? இனியும் தாமதிக்க வேண்டாம். இதுவே நாம் இயேசுவிற்காக மட்டும் நிற்க வேண்டிய நேரம். நீதிமொழிகள் 29: 25 – ”மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்”.

how-is-your-heart

உங்கள் இருதயம் எப்படிபட்டது? – யோவான் 12: 37-41b – ஜனங்கள் இயேசுவை பின்பற்றாததற்கு இரண்டாவது காரணம் அவர்கள் கல்லான இருதயம் உள்ளவர்கள். கல்லான இருதயம் உள்ள கிறிஸ்தவர்கள் கர்த்தரின் கிருபை தங்கள் வாழ்வில் கிரியை செய்ய அனுமதிக்கமாட்டார்கள். எ.கா- 20 வருஷமாக ஆலயத்திற்கு போகும் பழக்கத்தை உடைய கல்லான இருதயம் கொண்ட கிறிஸ்தவர்களால் ஒருபோதும் கோபத்தை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், ”இயேசுவின் இருதயம் உள்ள கிறிஸ்தவன்” பெருமை, கோபத்திலிருந்து விடுதலை பெற ஒவ்வொரு நாளும் கர்த்தரின் கிருபையை பெறுகிறான். நீங்கள் சுயமுயற்சியால் உருவான கிறிஸ்தவர்களா (அ) இயேசுவால் உருவான கிறிஸ்தவர்களா?

eyes-to-see-god

தேவனை பார்க்கும் கண்கள் – யோவான்12: 37-41 – ஏன் ஜனங்கள் இயேசுவை உண்மையாக விசுவாசித்து, பின்பற்றவில்லை என 3 காரணங்களை யோவான் இங்கு எழுதுகிறார். முதலாவது, அவர்கள் தங்கள் வாழ்வில் தேவனுடைய கிரியைகளை காணவில்லை.கர்த்தர் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வில் செய்ததையும், செய்துகொண்டிருக்கிறதையும் உங்கள் கண்களால் பார்க்க முடிகிறதா? நாம் நம் வாழ்க்கையை பற்றி குறைசொல்வோம் என்றால், நாம் தேவனுடைய கிரியை காணவில்லை என்று அர்த்தம். எ.கா- இஸ்ரவேல் ஜனங்கள் இறச்சியை சாப்பிட விரும்பினர் ஆனாலும், ஒவ்வொரு நாளும் கர்த்தர் மன்னாவை கொடுத்தார். கர்த்தரையும் அவரது கிரியைகளையும் காண கர்த்தர் நமது கண்களை திறக்க வேண்டும்.

children-of-light

ஒளியின் பிள்ளைகள் – யோவான் 12: 36 – இயேசு ”ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்”என்றார். இயேசு கிறிஸ்தவர்களுக்கு”ஒளியின் பிள்ளைகள்” என்ற புது பெயரை கொடுக்கிறார். இயேசுவோடு நெருங்கிய உறவில் இருக்கும்போது கவலையில்லாமல்,கோபப்படாமல் (அ) நம்பிக்கையை இழந்து இருந்ததாக கவனித்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால், இயேசுவின் ஒளி ஒவ்வொரு நாளும் உங்களுக்குள்ளும் உங்கள் மூலமாகவும் பிரகாசிக்கிறது. ஆனால், இயேசுவோடு உள்ள ஐக்கியத்தை இழந்தவுடன்-விரக்தி, அதிருப்தி மற்றும் நன்றியில்லாத குணம் நிறைந்த வாழ்வாக இருக்கும். (1 யோவான்3: 6).

finalcutpro-10-2-3

இருள் உங்களை மேற்கொள்கிறதா? – யோவான் 12: 35 – இயேசு ”இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு,ஒளி உங்களோடிருக்கையில் ஒளியில் நடவுங்கள்”என்றார். எனக்குள்ளும், என்னை சுற்றியும் அநேக இருள் இருக்கிறது. இயேசுவின் ஒளியால் மட்டுமே என் வாழ்வில் உள்ள இந்த இருளின் இரகசியங்களை காண்பித்து,அவற்றை மேற்கொள்ள உதவி செய்ய முடியும். எப்படி இயேசுவின் ஒளி நமது வாழ்வில் கிரியை செய்கிறது என தெரிந்து கொள்ள எபேசியர் 5: 8-14 -ஐ படியுங்கள். இயேசுவின் ஒளியினால் எனது உள்ளார்ந்த போராட்டங்கள் மறைந்து போகின்றன. கர்த்தாவே, எனது வாழ்வில் இன்னும் உம்மிடம் அர்பணிக்க வேண்டிய பகுதிகளை வெளிப்படுத்துங்க. ஆமென்.

jesus-made-his-own

இயேசு என்னை அவரது சொந்தமாக்கினார் – யோவான் 12: 31-34 – இயேசு நான் உயர்த்தப்படும் போது (சிலுவையில்), ஜனங்களை என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன் என்றார். என்னை அவருக்காக இழுத்துக்கொள்ளவதே இயேசு சிலுவையில் மரித்ததின் நோக்கம் ஆகும்.ஒரு வேளை எனது சொந்த வழிகள் ஆரம்பத்தில் மிக கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால்,அது அநேக பிரச்சணைக்கும், சமாதான குறைவுக்கும் வழிவகுக்கும் (நீதிமொழிகள்14: 12). இயேசு என்னை அவருக்காக இழுக்க அனுமதிக்க வேண்டும் (அ) நான் தொடர்ந்து எனது சொந்த விருப்பங்களிலே இருக்கவேண்டும். கர்த்தாவே, நீர் என்னை உமது சொந்தமாக்கிய சிலுவையையே நான் நோக்கி பார்க்கிறேன்.

whose-glory

யாருடைய மகிமை? – யோவான் 12: 29-30 – “கர்த்தரின் நாமத்தை மகிமைபடுத்தினேன்” என்று வானத்திலிருந்து சத்தம் கேட்டது. இயேசு ‘இந்த சத்தம் வந்தது’ என்றார்.எனவே இந்த முக்கியமான சத்தியத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரே நோக்கம் நமது வாழ்க்கையின் மூலம் கர்த்தர் மகிமையடைய வேண்டும். ஒரு நாளைக்கு ரூ.100 சம்பாதித்து மகிழ்ச்சி மற்றும் திருப்தி நிறைந்த சகோதரியை நான் சந்தித்தேன். அவர் உண்மையானவராகவும் நாளைக்காக முழுவதும் கர்த்தரையே நம்பியிருப்பதையும் தெரிந்து கொண்டார். நாம் கர்த்தரில் திருப்தியாக இருக்கும் போது அவர் மகிமைபடுவார். கர்தர் நமக்கு கொடுத்ததில் திருப்தியாக இருப்போம். அப்பொழுது அவர் மகிமைபடுவார்.

pray-like-jesus

இயேசுவை போல் ஜெபியுங்கள் – யோவான் 12: 27-28 – கர்த்தரின் சித்தத்திற்காகவும், அவருடைய நாம மகிமைக்காகவும் இயேசு ஜெபித்தார். அவர் சிலுவையில் பாடுபடபோகும் அந்த வேளையில் கூட இப்படி ஜெபித்தார். நமது ஜெபம் எப்படி உள்ளது? நாம் பாடுபடும் வேளையில் கூட கரித்தரின் சித்தம் நடக்கட்டும் என ஜெபிக்கிறோமா? ஏனென்றால்,கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் அனுமதிப்பதனால் தான் எல்லாம் நடக்கிறது. யோபு எல்லாவற்றையும் இழந்தார், பவுல் அடிக்கடி அடிக்கபட்டார் சிறையில் தள்ளப்பட்டார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இயேசு “துக்கம் நிறைந்தவர்” என அழைக்கப்படுகிறார் மேலும் பாடுபடும் உங்களுக்கு உதவி செய்ய உங்கள் நண்பராக இருக்கிறார். (ஏசாயா 53: 3)

follow-jesus

இயேசுவை பின்பற்றுங்கள் – யோவான்12: 26 – “ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால், அவன் என்னை பின்பற்றுவான்” என்றார் இயேசு. நீங்கள் சோதனைக்குட்படும் போதும், பிறர் உங்களை தவறாக நடத்தும் போதும், அசுத்தமான யோசனைகள் வரும் போதும் – உங்கள் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் இயேசுவை பின்பற்ற வேண்டும். எல்லா நேரங்களிலும் இயேசுவோடு நெருக்கமாக தங்கி இருப்பதே அவரை பின்பற்றுவதாகும். எப்படி ஒரு எறும்பு மற்றொரு எறும்பை நெருக்கமாக பின்தொடர்கிறதோ அதே போல. இப்படி நெருக்கமாக பின்பற்றுபவர்களை பிதாவானவர் கனம் பண்ணுவார் என இயேசு சொல்கிறார். உங்களை கிருபையும் அன்பும் நிறைந்த பாதைக்கு இயேசு நடத்தி செல்கிறார். எனவே அந்த பாதையில் நீங்கள் அவரை பின்தொடர வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.

loss-to-gain-life

பெறுவதற்காக இழக்கும் வாழ்க்கை – யோவான் 12: 25b – “இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவன் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வான்”என்றார் இயேசு. இதுவே கிறிஸ்தவ வாழ்வின் மிகப்பெரிய இரகசியமாகும். கழுகிற்கு தரையில் நடப்பதற்கு வசதியாக இருக்காது. அது விகாரமாகவும், அருவருக்கதக்கதாகவும் இருக்கும். ஆனால்,இந்த உலகத்திறகு மேலாக பறக்கும்போது அதற்கு வசதியாக இருக்கும். பவுல் நமக்கு சொல்லும் அறிவுரை – கொலோசெயர் 3:2 “பூமியிலுல்லவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுங்கள்”. உங்களது மனது உலகத்து ஜனங்கள் மற்றும் பொருட்கள் மேல் உள்ளதா?

secret-to-a-joyful-life

மகிழ்ச்சியான வாழ்வின் இரகசியம் – யோவான் 12: 25 – மற்றவர்களை உங்களால் மன்னிக்க முடியவில்லையா? மனஅழுத்தமாக இருக்கிறீர்களா? கர்த்தருடைய வார்த்தையை தியானிக்கவோ, அவரோடு தனிப்பட்ட நேரம் செலவழிக்கவோ முடியவில்லையா? இயேசு சொன்ன இந்த வார்த்தைகளே உங்கள் பிரச்சணைகளுக்கான பதில் (7 முறை இந்த வார்த்தை பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே தயவு செய்து இந்த வார்த்தையில் சிறிது நேரம் செலவிடுங்கள்). எதை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்களோ அதை இயேசுவின் முன் வைப்பீர்களா? அது ஒருவேளை உங்கள் தற்பெருமை (ஈகோ) வேலை, அழகு (அ) குடும்பமாக இருக்கலாம் (கலாத்தியர் 5: 24). கரத்தர் அதை உங்களுக்கு காட்டி, அவருடைய வழியில் உங்களை நித்திய வாழ்விற்கு வழி நடத்துவார்.

want-to-servw-god

கர்த்தருக்கு ஊழியம் செய்ய விரும்புகிறீர்களா? – யோவான் 12: 24 – நீங்கள் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க விரும்பும்போது, இயேசு சொன்ன படிகளை பின்பற்ற வேண்டும். முதலில் விதையானது நிலத்தில் விழவேண்டும். அடுத்து அதிக கனிகளை கொடுக்க அது சாக வேண்டும். இன்று நாம் மாம்பழம் சாப்பிடுகிறோம் அது கூட அதன் விதை விழுந்து, மரித்து பொறுமையோடே சகித்ததின் ஒரு பகுதிதான். எ.கா- நீங்கள் தாழ்மையை கற்று கொள்வதற்காக, உங்களது வாழ்வில் இந்த சூழ்நிலையையோ (அ) சில ஜனங்களையோ கர்த்தர் பயன்படுத்தலாம். நாம் நமது சுயநல நடத்தைக்கு சாகவில்லையென்றால், கர்த்தருக்காக கனிகொடுக்க (ஊழியம்) முடியாது என ஞாபகம்வைத்து கொள்ளுங்கள்

why-not-to-fear-copy

ஏன் பயப்படவேண்டாம்? – யோவான் 12: 12-15- எனக்காக ராஜா வருகிறார் எனவே, நான் பயப்பட தேவையில்லை. அவர் எனக்கு புது வாழ்க்கையை தரும் தாழ்மையான ராஜா. அவரது சந்நிதானத்தில் சந்தோஷம்,நோக்கம் மற்றும் பரிசுத்தம் கொண்ட புது வாழ்க்கை. நாம் மகிழ்ந்து கெம்பீரிக்க வேண்டிய நேரம் ஏனென்றால், ராஜா உன்னிடத்தில் வருகிறார் (சகரியா 9: 9). நீங்கள் இயேசுவை உங்கள் கர்த்தராகவும், ராஜாவாகவும் ஏற்றுகொள்வீர்களா? அவரது பிரசண்ணத்தின் சந்தோஷம் மட்டுமே, பயம், சந்தேகம் எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். நண்பனே, ராஜா உன் இருதயத்தில் வந்துவிட்டார் சந்தோஷப்பட்டு களிகூறு.

how-do-you-look-like-copy

நீங்கள் யாரை போல் இருக்கிறீர்கள்? – யோவான் 12: 9-11- அநேக ஜனங்கள் இயேசுவை விசுவாசிப்பதற்கு, லாசருவின் வாழ்க்கை ஒரு வல்லமையான சாட்சியாக இருந்தது. இன்று, ஜனங்கள் உங்கள் குணத்தை பார்கும் போது உங்களில் இயேசுவை பார்கிறார்களா? நல்ல கிறிஸ்தவராக இருக்க நாம் நடிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நாம் இயேசுவை பின்பற்றும் போது, நாம் இயேசுவை போல் ஆகிறோம். ஒரு மரம் பழத்தை கொடுக்க முயற்சி எடுக்க வேண்டியதில்லை. நல்ல நிலத்தில் வேறுன்றி சூரிய ஒளி, தண்ணீரினால் வளர்ந்து தானாக கனி கொடுக்கிறது. நண்பனே, இயேசு உங்களை “என்னுடைய சாட்சிகள்” என அழைக்கிறார் (அப்போஸ்தலர் 1: 8).

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2016-09-29 07:07:26Z | http://piczard.com | http://codecarvings.com

இயேசுவுக்கு அர்பணிப்பது – யோவான் 12: 7-8 – மரியாள் தனது 11 மாத சம்பளமாகிய அந்த எண்ணையை இயேசுவுக்காக பயன்படுத்தி வீணாக்குவதாக சீஷர்கள் நினைத்தனர். ஆனால், இயேசு அவளது அர்பணிப்பாகிய இந்த செயல் எங்கெல்லாம் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறதோ; அங்கெல்லாம் சொல்லப்படும் என்றார் (மத்தேயு 26: 13). நீங்கள் இயேசுவிற்காக என்ன அர்ப்பணம் செய்கிறீர்கள்? இயேசுவோடு தனிமையாக நேரம் செலவழிக்காத ஒரு கிறிஸ்தவன் தரையில் இருக்கிற மீன் போன்றவன். அது நீண்ட நேரம் உயிரோடு இருக்க முடியாது. மரியாள் தன்னால் இயன்றதை செய்தாள் (மாற்கு14: 8). எனது வாழ்க்கையையும், நேரத்தையும் வைத்து நான் என்ன செய்ய போகிறேன் என்பதை பார்க்க இயேசு காத்திருக்கிறார்.

whats-your-intention

உங்களது நோக்கம் என்ன? – யோவான் 12: 4 -6 – ஏழை ஜனங்கள் மேல் அக்கறை உள்ளவனாக யூதாஸ்காரியோத் பேசினான்;ஆனால், அவன் அவர்கள் பணத்தை திருட விரும்பினான். தேவனுடைய பிள்ளைகளாகிய நமது நோக்கமும், பேச்சும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு, அவர்களிடமிருந்து ஏதாவது திரும்ப எதிர்பார்க்கும் போது நாம் தவறான நோக்கத்தோடு உதவி செய்கிறோம் (லூக்கா 6: 34, 35). எ.கா – அரசியல்வாதிகள் ஜனங்களுக்கு உதவி செய்ய விரும்புவார்கள் ஆனால் நமக்கு அவர்களது நோக்கம் தெரியும். நமது அன்பு சுத்த இருதயத்தோடும், நமது பேச்சு கிருபையினாலும் நிரம்பியிருப்பதாக (நீதிமொழிகள் 22: 11). ஆமென்.

give-god-your-best-copy

உங்களில் சிறந்ததை கர்த்தருக்கு கொடுங்கள் – யோவான் 12: 1 -3 – மரியாள் விலையுயர்ந்த தைலத்தால் இயேசுவின் பாதங்களை கழுவினாள். அவள் இயேசுவிற்காக சில தியாகங்களை செய்தாள். நீங்கள் இயேசுவை பின்பற்றுவதற்காக என்ன தியாகம் செய்கிறீர்கள்? முழு இருதயத்தோடு இயேசுவை பின்பற்றுவோம். உங்கள் நாளின் சிறந்த நேரத்தை அவருக்கு கொடுப்போம். உங்கள் வாழ்வில் சிறந்த வருஷங்களை அவரது சேவைக்காக கொடுப்போம். உங்கள் நேரம், உழைப்பு, பணம் மற்றும் நண்பர்களை தியாகம் செய்து கர்த்தரையும் ஜனங்களையும் நேசிப்போம். நாம் தன்னைத்தான் வெறுத்து கிறிஸ்துவை பின்பற்றாவிட்டால் நாம் உண்மையான சீஷராக இருக்க முடியாது (லூக்கா 9: 23-25).

spiritual-attacks-copy

ஆவிக்குரிய தாக்குதல்கள் – யோவான் 11: 47 -57 – இயேசு லாசருவை உயிரோடு எழுப்பியதிலிருந்து தலைவர்களும் ஜனங்களும் அவரை கைது செய்யவும், அவமானபடுத்தி கொலை செய்யவும் முயற்சி செய்தனர். நாம் இயேசுவை பின்பற்ற முழுமனதாக தீர்மானம் எடுத்தவுடன், சோதனைகளும் போராட்டங்களும் ஏற்படுவதை கவனித்திருக்கிறீர்களா? இயேசுவிற்கு எதிரான அதே எதிரி இன்றும் கிரியை செய்து கொண்டிருக்கிறான். ஆனால் சந்தோஷபடு நண்பனே, இந்த உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர். நன்றி ஆண்டவரே !!!

Dramatic religious photo illustration of Good Friday and Easter Sunday Morning reflecting a prayerful moment of silence with a silhoutted person bowing his head, a warm sunrise rises over a foggy lake, and three crosses on a hill reflected in the water as well.

அதிக அற்புதங்களை காண மனந்திரும்ப வேண்டும் – யோவான் 11:41-46 – இயேசு லாசருவை உயிரோடு எழுப்பியதால் அநேகர் அவரை விசுவாசித்தனர்(வ42). இயேசு தன் வாழ்வில் அற்புதங்களை அனுபவித்த ஜனங்கள் மனந்திரும்பாததை கண்டு வருத்தப்பட்டார்.மனந்திரும்புதலும் ஆராதனையும் கர்த்தரையும் அவரது ஒவ்வொரு கிரியையையும் நமது வாழ்வில் பின்பற்றுவதாகும்..இயேசு உங்கள் வாழ்வில் செய்த அற்புதங்களை அசட்டையாக எண்ணாதீர்கள். இன்று ஜெபத்தில் சிறிது நேரம் செலவழித்து நமது வாழ்வில் கர்த்தரிடம் அர்பணிக்க வேண்டிய (அ) மனந்திரும்ப வேண்டிய பகுதிகளை பார்க்கலாமா ?

believe-to-see-glory

மகிமையை காண விசுவாசிக்க வேண்டும் – யோவான் 11: 38 -40 -” நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்”என இயேசு சொன்னார். கல்லறை நாறும், எனவே அதை மூடியிருந்த கல்லை எடுக்க மார்த்தாள் விரும்பவில்லை. இயேசு என்னை என்ன செய்ய சொல்கிறாரோ அதை சாக்குபோக்கு சொல்லாமல் செய்வதே அவரை விசுவாசிப்பதாகும். அதினால் நாம் விசுவாசித்து செய்யும் போது,நமது வாழ்வில் கர்த்தரின் மகிமையை காண முடியும். நீங்கள் செய்யவில்லையென்றால் கர்த்தரின் மகிமையை பார்க்க முடியாது. உங்கள் வாழ்வில் ஏதாவது அகற்ற வேண்டிய கற்கள் இருக்கிறதா? நீங்கள் நேர்மையாக அவரை தேடி மனந்திரும்பும் போது கர்த்தர் உங்களுக்கு காட்டுவார்.

god-knows-why

ஏன் என கர்த்தருக்கு தெரியும் – யோவான் 11: 36 -38 – “லாசருவை இயேசு சாகமலிருக்க பண்ண கூடாதா “என ஜனங்கள் கேள்வி கேட்டனர். ஜனங்கள் சந்தேகம் மற்றும் பாடுகளின் நேரங்களில் கர்த்தரின் ஞானத்தை கேள்வி கேட்கின்றனர். ஆனால்,நமக்கு தெரியும் நமது ஞானமும்,புரிந்து கொள்ளுதலும் குறிப்பிட்ட அளவானது. வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு தூரமோ நமது நினைவுகளுக்கும்,கர்த்தரின் நினைவுகளுக்கும் அவ்வளவு தூரம் (ஏசாயா55: 8,9). அன்பான தேவனுடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எதுவும் கர்த்தரின் முடிவில்லாத ஞானத்தால் அனுமதிக்கப்படுகிறது. அவருடைய ஞானத்தை நம்புவோம்.

jesus-wept

இயேசு அழுதார் – யோவான் 11: 33 -35 – மரியாளும் மற்றவர்களும் லாசருக்காக அழுதபோது இயேசு அழுதார். இதுதான் இயேசுவின் இருதயம் – நமது பாடுகளுக்காக வேதனைபடுவது. நமது வாழ்வில் சந்தோஷத்திற்கும் பாடுகளுக்கும் நேரம் உண்டு. ஆனால் பாடுகளின் நேரமே மிக தனிமையாக உணர்வீர்கள். நண்பனே, உங்கள் பாடுகளில் நீங்கள் ஒருபோதும் தனிமையாக இருப்பதில்லை. உங்கள் இருதயத்தில் இயேசுவின் சமாதானம் இறங்கி உங்கள் வேதனைகளை வெளியே தள்ளும்படி நான் ஜெபிக்கிறேன். இந்த சமாதானம் ஒரு மனிதனோ, பொருளோ (அ) அனுபவமோ தரமுடியாதது.யோவான் 14:27 ஐ படியுங்கள்.

feet-of-jesus

இயேசுவின் பாதம் – யோவான் 11: 28 -32 – மரியாள் லாசருவின் கல்லறைக்கு அழுகிறதற்கு போகிறாள் என ஜனங்கள் நினைத்தனர். ஆனால்,அவள் ஒடி சென்று இயேசுவின் பாதத்தில் விழுந்தாள். கல்லறை நமக்கு பழைய நினைவுகளையும், கண்ணீரையும் மட்டுமே தரும் எந்த பதிலையும் தராது. ஆனால் இயேசுவின் பாதத்தில் நாம் தேற்றப்பட்டு புதுப்பிக்கபடுகிறோம். நீங்கள் சமாதானத்தை எங்கு தேட முயற்சி செய்கிறீர்கள்? நண்பர்களா அல்லது ஊடகங்களா? (டி.வி, இன்டர்னெட்). “இல்லை” கவலைகளுக்கு முன்பாக, கவலையின் போது, கவலை இல்லாத போதும் கூட, எல்லா நேரமும் இயேசுவின் பாதத்தில் விழுவோம் . கல்லறை அல்ல’ இயேசுவே’ நமது வாழ்வின் நம்பிக்கை.

life-exchange

வாழ்க்கையை மாற்றுவது – யோவான்11: 25 -27 – உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு கேள்வியை இயேசு கேட்கிறார். “என்னை விசுவாசித்து என்னில் வாழ்கிற ஒவ்வொருவரும் எப்போதும் மரிப்பதில்லை”. நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் நான் உங்களிடம் இன்னொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு இயேசுவோடு வாழ விருப்பமா? இயேசுவோடு வாழ்வதென்பது எனது குறிக்கோளை இயேசுவுடையதாக மாற்றுவது. ‘குறிக்கோள்’ – எனது லட்சியம் இயேசுவின் லட்சியம், எனது அளவுள்ள அன்பு அவரது அளவற்ற அன்பு, எனது கவலை அவரது சமாதானம், எனது பயம் அவரது நம்பிக்கை. நண்பனே, இன்றே இந்த புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்.

regrets

வருத்தமா? – யோவான் 11: 17 -24 – மார்த்தாளும்,மரியாளும் “ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” என (வசனம் 32) சொன்னார்கள். ஏன் ஆணடவரே இது? (அ) ஏன் இப்படி ஆண்டவரே? என ஜனங்கள் கர்த்தரை கேள்வி கேட்கின்றனர். ஆனால் விசுவாசத்தோடு வாழும் கிறிஸ்தவர்கள், கர்த்தரை கேள்வி கேட்பதில்லை. கர்த்தரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் கீழ்படிதலோடு நடக்கிறார்கள். கடந்ததை நினைத்து கர்த்தரை கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு, இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு தைரியமாக முதல் அடியை எடுத்துவைப்போம். நண்பனே, நமது திட்டம் இல்லை, நமது வாழ்வில் கர்த்தரின் திட்டத்தில் விசுவாசத்தை வைப்போம்.

vessel-for-god-to-use

கர்த்தர் பயன்படுத்தும் பாத்திரம் – யோவான் 11: 11 -16 – இயேசு”லாசரு மரித்த போது நான் அங்கு இல்லாததற்காக நான் சந்தோஷப்படுகிறேன்”என்றார். கர்த்தர் தமது நோக்கத்தை நிறைவேற்ற லாசருவின் வாழ்க்கையையும், மரணத்தையும் பயன்படுத்தினார். கர்த்தர் உன்னை அவரது மகிமைக்காக பயன்படுத்த விருப்பமாகவும், ஆயத்தமாகவும் இருக்கிறாயா? எனது வாழ்க்கை ஒன்றுமில்லை என தன்னை முழுவதும் அர்பணிக்கும் ஜனங்களை கர்த்தர் பயன்படுத்துவார் (வெளி 12 11). உங்கள் கண்கள், கைகள், கால்கள், படிப்பு, வேலை மற்றும் பணம் என உங்களுக்கு சொந்தமான எல்லாம் அவருடையது என சொல்லுங்கள். கர்த்தாவே,உம் விருப்பம் போல் என்னை பயன்படுத்தும்.

follow-jesus

இயேசுவை பின்பற்றுங்கள் – யோவான் 11: 7 -10 – இயேசுவை கல்லெறிந்த ஊருக்கு அவர் போவதை அறிந்த சீஷர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில நேரங்களில், கர்த்தர் நம்மை நிலையில்லாத மற்றும் பாடுகளின் பாதைகளில் நடத்த விரும்புவார். நமக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். கர்த்தர் முழு திட்டத்தையும் காட்டமாட்டார். ஆனால் நான் விசுவாசத்தோடு முதல் அடியை எடுத்து வைக்க அவர் விரும்புவார். சீஷர்கள் இயேசுவோடு போகவில்லை என்றால், அற்புதத்தை தவறியிருக்க முடியும். உங்கள் அவிசுவாசத்திலிருந்து மனந்திரும்பி, முழுவதுமாக இயேசுவிடம் அர்பணியுங்கள். போ நண்பனே, அவர் உன்னை என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே செய்.

why-delay

ஏன் தாமதம்? – யோவான் 11: 4 -6 – லாசரு வியாதியாயிருப்பதை தெரிந்த பின்னும் அவனை சந்திக்க ஏன் 2 நாட்கள் தாமதித்தார்? நமக்கு இது போன்ற கேள்விகள் இருக்கலாம். ஏன் என் வியாதி இன்னும் குணமாகவில்லை? எப்பொழுது என் வேதனையை மேற்கொள்ள முடியும்? இங்கு லாசருவின் வியாதியையும், மரணத்தையும் கர்த்தர் அவரது மகிமைக்காக பயன்படுத்தினார். உங்கள் வேதனையிலும், பாடுகளிலும் கர்த்தர் மகிமைபட விரும்புவதை நீங்கள் ஏற்று கொள்வீர்களா? இது ஒருவேளை நம்பமுடியாததாக இருக்கலாம். ஆனால், நமது நினைவுகளைவிட கர்த்தரின் நினைவுகள் உயர்ந்தது. கர்த்தர் உங்களை ஆற்றித்த தேற்றுவாராக. ஆமென்.

who-is-your-first-aid-copy

யார் உங்கள் முதலுதவி? – யோவான்11:1-3 – “நீர் நேசிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்”என லாசருவின் சகோதரிகள் இயேசுவிற்கு செய்தி அனுப்பினர் என பார்கிறோம். இயேசு லாசருவை நேசித்தார் ஆனாலும்,கர்த்தர் வியாதியை அனுமதித்தார். அந்த வியாதியை பற்றி முதலில் இயேசு அறிந்து கொள்ளட்டும் என்பதே அந்த சகோதரிகளின் முதல் பதிலாக இருந்தது. நமது வியாதியிலோ (அ) சரீர பிரச்சணையிலோ நமது முதல் பதில் என்ன? நாம் வேதனையில் இருக்கும் போது முதலாவது கிறிஸ்துவிடம் அவரது சித்தத்திற்கு அர்பணிக்க வேண்டும். ஒருமுறை நாம் கிறிஸ்துவிடம் அர்பணித்துவிட்டால், அதற்கான தமது சித்தத்தை அவர் செய்து நிறைவேற்றுவார் என்பது உங்களுக்கு தெரியும்.

are-you-fully-in-copy

முழுவதும் உள்ளே இருக்கிறீர்களா? – யோவான்10:39-42 – இயேசு சந்தேகப்பட்ட ஜனங்களை விட்டு, தன்னை விசுவாசிக்கும் ஜனங்கள் உள்ள இடத்திற்கு போனார். நமது வாழ்வை அவரிடம் அர்பணிக்காவிட்டால், இயேசுவின் கிரியை நம்மால் அனுபவிக்க முடியாது. நமது அவிசுவாசத்தினால் இயேசுவைவிட்டு தூரமாக இருப்பதாக உணரலாம். நண்பனே, நீ இயேசுவை விசுவாசிக்கும் போது அவர் இருக்கிறார். உங்கள் சந்தேகங்களை எறிந்துவிட்டு இயேசுவிடம் வாருங்கள். இயேசுவை நீங்கள் விசுவாசித்தால், முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். சாலையின் நடுவில் நிற்காதீர்கள். ஒன்று “முழுவதும் இயேசு” (அ) “முழுவதும் சுயம்”. நடு வழியில் இல்லை.

work-of-god-inside-you

உங்களுக்குள் தேவனுடைய கிரியை – யோவான் 10: 35-35 – இயேசு அவருடைய கிரியைகளை விசுவாசிக்க வேண்டுமென்றார். யோவான்14:10, பிதா என்ன செய்தாரோ அதுவே இயேசுவின் வாழ்க்கை வெளிப்பாடாகும். இயேசுவின் அதே வாழ்க்கை நமக்கும் விருப்பமா? கர்த்தருடைய ஆவியானவர் நமக்குள் கிரியை செய்கிறார். நாம் அவருடைய கிரியைக்கு கீழ்படிய வேண்டும். எ.கா- நீங்கள் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் போது, நம்முடைய விருப்பத்திற்கு பதிலாக,ஆவியானவரின் வழிநடத்தலுக்கு நாம் விட்டு கொடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நம்பி அவர் கிரியை செய்ய அனுமதிப்பீர்களா?

dont-search-at-wrong-places

தவறான இடத்தில் தேடாதீர்கள் – யோவான் 10: 31-34 – இயேசு பார்ப்பதற்கு தேவனை போல் தோன்றவில்லை. எனவே, ஜனங்கள் அவரை கல் எறிவதற்கு தயாரானார்கள். ஏசாயா 53: 2 ல் “ஜனங்கள் விரும்பதக்க தோற்றம் இயேசுவிற்கு இல்லை,எனவே அவர்களால் அவர் வெறுக்கப்பட்டார்” என எழுதப்பட்டுள்ளது. அநேக நேரம் நாம் தேவனை தொழுது கொள்ள சரியான மனநிலை, இசை (அ) பெரிய சபை ஆகியவற்றை தேடுகிறோம். சரீர உணர்வுகளுக்காக தேவனை தொழுது கொள்ளாதீர்கள். உங்கள் சொந்த கற்பனையின் அடிப்படையில் கர்த்தரை தேடுகிறீர்களா? கர்த்தர் இந்த இடத்தில் தான் உங்களை பார்க்க முடியும் – மத்தேயு 6: 5,6.

life-that-never-dies

ஒருபோதும் சாவாத வாழ்க்கை – யோவான் 10: 22-30 – இயேசு கிறிஸ்து கொடுக்கும் வாழ்க்கையை யாரெல்லாம் பெற்றுகொள்கிறார்களோ அவர்கள் அழிந்து போவதில்லை. நமது மனித சரீரம் நாளுக்கு நாள் வயதாவதை எதுவும் தடுக்க முடியாது. ஆனால்,இயேசு எப்பொழுதும் சாவாத வாழ்வை என் ஆத்துமாவிற்கு கொடுக்கிறார்.ஒருவரும் அவருடைய கையிலிருந்து இந்த வாழ்வை பறித்து கொள்ள முடியாது. நண்பனே, இது ஒரு மனிதனுடைய வார்த்தையில்லை இது இயேசு கொடுத்த வாக்குதத்தம். நமது ஆத்துமா அமைதியாயிருக்கட்டும் ஏனென்றால் அது இயேசுவின் கைகளில் இருக்கிறது. அது அவரது கையில் தொடர்ந்து என்றென்றும் இருக்கிறது. ஓ, என்ன ஒரு மகிமையான உண்மை.

jesus-laid-down-his-life

இயேசு அவருடைய ஜீவனை கொடுத்தார் – யோவான் 10:14 – 21 – ஜீவனை கொடுப்பது என்றால் என்ன? ஜனங்கள் தன்னிடம் வர வேண்டுமென இயேசு எதிர்பார்க்கவில்லை, அவர் நடந்து சென்று ஜனங்களை சந்தித்தார். ஜனங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை அறிந்து கொள்வதற்காக தனது தூக்கத்தை குறைத்தார். ஒரு பெண்ணை சந்தித்து ஆறுதல் கூற 100 கி.மீட்டர் நடந்து சென்றார். இவை எல்லாவற்றையும் அன்போடும், சந்தோஷத்தோடும் செய்தார். நமது சொந்த விருப்பத்தில் வாழ்க்கை நடத்தும்வரை “நான் இயேசுவை நேசிக்கிறேன்” என சொல்ல முடியாது. மற்றவருக்காக ஜீவனை கொடுப்பதுபற்றி எனக்கு சில நடைமுறை உதாரணங்களை எழுதுங்கள் – 7022779911.

who-owns-you

நீங்கள் யாருக்கு சொந்தம்? – யோவான் 10:12 – 13 – நல்ல மேய்ப்பராகிய இயேசு ஆடுகளின் (என்) சொந்தக்காரர். நீங்கள் இயேசுவின் உடமையாக இருக்கும்போது, அவர் தன் ஜீவனை நமக்காக கொடுத்து நம்மை பாதுகாக்கிறார். ஆனால், பிரச்சணையின் நாட்களில் இயேசுவை தவிர மற்ற எல்லாம் ஒடிப்போகும். உங்களை யாரோ (அ) எதாவது கட்டுபடுத்துகிறதா? அது உங்களை காப்பாற்றாது, ஆனால் இயேசுவால் முடியும். இன்று நீங்கள் உண்மையை தெரிந்து கொண்டீர்கள் என நம்புகிறேன். உங்கள் ஆத்துமாவிற்கு மேய்ப்பராகவும், சொந்தகாரராகவும் இருக்க இயேசுவை அனுமதியுங்கள். 1 கொரிந்தியர் 6: 19, 20 ஐ படியுங்கள்.

jesus-the-good-shepherd

இயேசுவே நல்ல மேய்ப்பன் – யோவான் 10: 11 – எனக்கு இயேசு நல்ல மேய்ப்பராக இருக்கிறார். நல்ல மேய்ப்பன் அவருடைய ஆடுகளுக்காக தன்னுடைய ஜீவனை கொடுக்கிறார். இந்த பகுதியில் அவரது வாழ்க்கையை கொடுப்பதுபற்றி இயேசு 5 முறை சொல்லியிருப்பதை கவனித்தீர்களா? இயேசு அவருடைய வாழ்க்கையை கொடுத்ததினால் எனக்கு நிறைவான வாழ்வு உள்ளது. அந்த வாழ்க்கை திருடுபோகாத (அ) எதிரியால் அழிக்க முடியாதது ஆகும். நாம் தகுதியில்லாதவர்கள் ஆனாலும் கூட, இயேசுவை பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் நிறைவான வாழ்வு ஒரு பரிசாகும். 2கொரிந்தியர் 5: 15 கவனமாக வாசித்து உங்கள் எண்ணங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள்.

receive-the-life

வாழ்க்கையை பெற்றுக்கொள்ளுங்கள் – யோவான் 10: 7-10 – இங்கு 2 பேர் ஆடுகளிடம் (என்னிடம்) வர தயாராக இருக்கிறார்கள். 1 திருடன் மற்றொன்று நல்ல மேய்ப்பன் (இயேசு). திருடன் என் சந்தோஷத்தை திருடவும், என்னை அன்பற்றவனாக்கவும், என் உறவை அழிக்கவும் வருகிறான். ஆனால், இயேசு கிறிஸ்து உடைந்து போனதை குணமாக்கவும், அளவில்லாத அன்பு, விடுதலை, மற்றும் நோக்கம் உள்ள வாழ்க்கையை தருகிறார். கவலை, சந்தேகம் மற்றும் பயமற்ற ஒரு வாழ்க்கை. நண்பனே, இன்றே வந்து இயேசு கொடுக்கும் இந்த வாழ்க்கையை பெற்றுக்கொள்ளுங்கள். அதிகம் அறியவும்(அ) பேசவும் வேண்டுமானால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

whose-voice-do-you-hear

நீங்கள் யாருடைய சத்தத்தை கேட்கிறீர்கள்? – யோவான் 10: 4-6 – நமக்கு அவரது சத்தம் தெரியும். எனவே,நாம் (ஆடுகள்) இயேசுவை (மேய்ப்பர்) பின்பற்ற வேண்டும். உங்களுடைய கிறிஸ்தவ ஒட்டத்தில், இயேசுவிட வேறு ஏதாவது சத்தத்தின் பின் ஒடுகிறீர்களா? (அ) தவறான மேய்பனின் சத்தத்தை பின்பற்ற விரும்புகிறீர்களா? சில உதாரணங்கள் 1) வாழ்க்கைக்கான வழிக்காட்டுதலை உலகத்தின் மக்களிடம் தேடுவது இயேசுவின் சத்தம் இல்லை. 2) பிறரது வாழ்க்கையை பார்த்து நமது வாழ்க்கையின் இலட்சியங்களை தீர்மானித்தால், நாம் இயேசுவை வெறுக்கிறோம். உங்கள் வாழ்வில் அவர் தனிப்பட்ட திட்டம் வைத்துள்ளார்.

jesus-knows-and-leads

இயேசுவிற்கு தெரியும், வழிநடத்துவார் – யோவான் 10: 1-3 – இங்கு இயேசு அவரை மேய்ப்பராகவும் நம்மை ஆடுகளுக்கும் ஒப்பிடுகிறார். 2 சத்தியங்களை இதில் கற்றுக்கொள்ளலாம் -1) இயேசு உங்களை பேர்சொல்லி அறிந்திருக்கிறார் – உங்கள் குணம் அவருக்கு தெரியும், உங்களைபற்றி உங்களைவிட அவருக்கு அதிகம் தெரியும். அவர் உங்களோடு நெருங்கிய உறவு வைக்க ஆசைபடுகிறார். 2) இயேசு உங்களை வழிநடத்துகிறார்- நீங்கள் இந்த வாழ்க்கையினால் சோர்ந்து போய்விட்டீர்களா? நீங்கள் உங்களுக்கு சொந்தமில்லை இயேசு உங்களை வழிநடத்துகிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கையை இயேசுவின் கட்டுபாட்டிற்குள் கொடுப்பீர்களா? அப்பொழுது உங்களுக்கு எது சிறந்ததோ அதில் அவர் உங்களை வழிநடத்துவார்.

blind-need-direction

குருடருக்கு வழிகாட்டுதல் தேவை – யோவான் 9: 40-41 – “நாங்கள் பார்க்கிறோம்’என நீங்கள் சொல்லும் வரை உங்கள் பாவங்கள் தொடர்கிறது”என்றார் இயேசு. ஏன் நமது உள்ளான போராட்டங்களுக்கு முடிவில்லை? இயேசு இங்கு சுட்டிகாட்டியது போல, நமக்கு எல்லாம் தெரியும் (பார்கிறோம்) மற்றவர்கள் தான் மாற வேண்டும் என சொல்கிறோம். ஆனால் வழிகாட்டுதல் தேவையான அந்த குருடனை போல யாரெல்லாம் இயேசுவிடம் வருகிறோமோ, நாம் நமது உள்ளான போராட்டங்களான கோபம்,பொறாமை மற்றும் கவலைகளை மேற்கொள்ள முடியும். உங்கள் வாழ்வில் ரொம்ப நாட்களாக ஏதாவது பாவம் தொடர்கிறதா? இன்று இந்த வசனங்களின் மூலம் இயேசு என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

how-jesus-helps-the-blind

எப்படி பார்வையில்லாதவனுக்கு இயேசு உதவினார்? – யோவான் 9: 37-39 – “பார்க்காதவர்கள் பார்ப்பார்கள், பார்க்கிறவர்கள் குருடராவார்கள்”என்றார் இயேசு. ஒரு மனிதன் அவன் வாழ்வில் தவறாக உள்ள பகுதியை காட்டும்படி இயேசுவிடம் கேட்காவிட்டால், தொடர்ந்து இருளிலே இருப்பான். எ.கா- தன் மனைவி மீது கோபடுகிற பழக்கம் கொண்ட ஒரு கிறிஸ்தவ கணவர் இருக்கிறார். ஆனால்”கர்த்தாவே, நான் சில பாவங்களில் குருடனாக இருக்கிறேன், என் சொந்த பாவங்களை பார்க்க என் கண்களை திறங்க” என இயேசுவிடம் வந்து சொல்லும் போது மட்டுமே, அவர் விடுதலையையும் இருதயத்தில் சமாதானத்தையும் பெறுவார். இன்றே இயேசுவிடம் கேளுங்கள்!!!

jesus-finds

இயேசு பார்க்கிறார் – யோவான் 9: 33-38 – ஜனங்கள் பாவத்தினால்தான் அந்த மனிதன் குருடனாக பிறந்தான் என சொல்லி அவனை ஒதுக்கினர். இயேசு இதை கேள்விப்பட்டபோது, உடனே அவனை கண்டுபிடித்தார். இழந்து போனவர்களை தேடி இரட்சிக்கவே இயேசு வந்தார் (லூக்கா19: 10). நீங்கள் தனிமையாக இருப்பதாக உணர்ந்தாலும், ஜனங்களால் வெறுக்கப்பட்ட போதும் கூட நீங்கள் ஒருபோதும் தனிமையாயிருப்பதில்லை. இயேசு உங்களை பார்க்கிறார், நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டுமென விரும்புகிறார். அந்த குணமாக்கப்பட்ட மனிதனை போல, இயேசுவை விசுவாசித்து தொழுதுகொள்ளுவோம். நான் மரணத்தின் பள்ளதாக்கிலே நடந்தாலும், நீர் என்னோடே கூட இருக்கிறீர்.உமக்கு நன்றி அப்பா.

healed-man

குணமடைந்த மனிதன் – யோவான் 9: 28-32 – குணமடைந்த மனிதனுக்கு பரிசேயர்கள் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். அவனது பெற்றோர் அவர்களுக்கு பயந்திருந்தபோதும், குணமான மனிதன் கர்த்தருக்காக நின்றான். நாம் தேவனை பற்றி தெரிந்திருப்பது ஒன்று. ஆனால், நம் அனுதின வாழ்வில் அவரது விடுதலையை அனுபவிப்பது மற்றொரு காரியம். அப்பொழுது”கர்த்தர் நம் வாழ்வில் என்ன செய்துள்ளார்”என எங்கும் தைரியமாக நின்று பேச முடியும். கர்த்தர் உங்கள் வாழ்க்கையை அவரது மகிமைக்கும், விடுதலைக்கும், பெலத்திற்கும் உதாரணமாக பயன்படுத்த முடியுமா? கர்த்தாவே, உமக்காக நிற்க, என்னிலுள்ள குணமாக்க முடியாத பாவங்களிலிருந்து என்னை விடுவியும்.

your-testimony

உங்களுடைய சாட்சி – யோவான் 9: 24-27 – “நான் குருடனாயிருந்தேன் இப்பொழுது பார்க்கிறேன்” என சந்தேகப்பட்ட ஜனங்களிடம் அந்த மனிதன் சொன்னான். குணமாக்கப்பட்ட மனிதனிடமிருந்து அருமையான வார்த்தைகள் வந்தது !!. நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையும் இப்படிபட்டதுதான். இப்படிப்பட்ட அநேக சாட்சிகளை நாம் கேட்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன் – நான் வழக்கமாக பிறருடைய பொருட்கள் மீதும், உடம்பு மீதும் இச்சை உள்ளவனாக இருந்தேன், ஆனால் கிறிஸ்து என்னை விடுவித்தார். நான் எப்பொழுதும் கவலையோடும், ஏக்கத்தோடும் போராடிக்கொண்டிருந்தேன், ஆனால் கிறிஸ்து என்னை விடுதலையாக்கினார். நான் அடிக்கடி என் மனைவியோடு சண்டைபோடுவேன் ஆனால் கிறிஸ்து எங்களை சமாதானத்தின் ஜனமாக மாற்றினார்.ஆமென்.

fear-of-rejection-copy

ஒதுக்கி தள்ளும் பயம் – யோவான் 9: 17-23 – பிறவிக்குருடனின் பெற்றோர் இயேசுதான் அவர்கள் மகனை குணமாக்கினார் என சொல்வதற்கு பயந்தனர். சமூசாயத்தினாலும், சம்பிரதாயங்களாலும் ஒதுக்கி வைக்கப்படுவோம் என அவர்கள் பயந்தனர். இரு மனதை உடைய கிறிஸ்தவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் ஜனங்களால் வரும் மகிமையை அதிகம் விரும்புவார்கள் (யோவான் 12: 42, 43). ஜனங்களை பிரியப்படுத்தவோ (அ) அவர்களின் அனுமதியை பெறவோ கஷ்டப்பட்டு எடுத்த முயற்சிகளை கர்த்தர் காட்டும் படி சிறிது நேரம் ஜெபிப்போமா? விசுவாசத்தால் இந்த பயத்தை புறம்பே தள்ள முடியும். விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாமிருப்பது கூடாத காரியம் (எபிரேயர்11: 6).

my-time-for-others

பிறருக்கான எனது நேரம் – யோவான் 9: 13-16 – இயேசு ஒய்வு நாளில் பார்வையற்ற மனிதனை குணமாக்கினார். ஆனால், மதத்தை பின்பற்றும் ஜனங்கள் வருத்தப்பட்டனர். மத்தேயு 12: 7 “கர்த்தர் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறார்” என இயேசு சொன்னார். நமது ஒய்வு (இலவச) நேரங்களில் நாம் என்ன செய்வோம். நம்முடைய முழு ஒய்வு நேரமும் நமது சொந்த நோக்கத்திற்காக செலவழிக்கப்படுகிறதா? இந்த வாரம் எவ்வளவு நேரம்,சக்தி,கவனம் இவற்றை நமது குடும்ப நபர் அல்லாத பிறருக்காக கொடுத்தோம். நாம் இயேசுவிடம் நெருக்கமாகும் போது, நமது இருதயம் – ஜனங்களுக்கு இரக்கம் செய்கிற இருதயமாகிய அவருடைய இருதயமாக மாறும்.

vision-to-see-god

கர்த்தரை பார்க்க பார்வை – யோவான் 9: 8-12 – “இயேசு நீ போய் கழுவு என்றார், அப்படியே நான் போய் கழுவி பார்வை அடைந்தேன்” என பார்வையை பெற்றுக்கொண்ட மனிதன் சொன்னான். அந்த பார்வையற்ற மனிதன் சாக்கு போக்கு சொல்லவோ (அ) தாமதிக்கவோ இல்லை. அவன் பார்வையடைய வாஞ்சையாய் இருந்ததால் உடனே சென்றான். நீங்கள் ஏதாவது ஆவிக்குரிய அறியாமை (அ) கட்டுகளிலிருந்து வெளியே வர வாஞ்சையாய் இருக்கிறீர்களா? இயேசுவின் வார்த்தையை கவனித்து கீழ்படியுங்கள். சாக்கு போக்கு சொல்லாத, தாமதிக்காத கீழ்படிதல் அவசியம். கர்த்தாவே, உமது மகிமையையும், அழகையும் காணும் கண்களுக்காக நான் வாஞ்சையாய் இருக்கிறேன். .

go-wash

போ, கழுவு – யோவான் 9: 6-7 – இயேசுவின் கட்டளைபடி, அந்த பார்வையில்லாத மனிதன் போய் கழுவி பார்வையடைந்தவனாய் திரும்பினான். இங்கு வேறொரு மனிதன் இயேசுவிடம் வந்தான் ஆனால், கவலையாக திரும்பி சென்றான் (மாற்கு10: 17-27). ஏனென்றால் அவனுக்கு அநேக பொருட்கள் இருந்தன. ஆகவே அவன் ஆவிக்குரிய குருடனாக தொடர்ந்து இருந்தான். நீங்கள் தேவனுடைய அற்புதத்தை பார்க்க தவறிவிட்டீர்களா? இயேசுவுக்குள் திருப்தி தருகிற உண்மையான சந்தோஷம், சமாதானத்தை அனுபவித்திருக்கிறீர்களா? நமது பார்வையற்ற தன்மை கழுவப்படுகிற நதியாகிய இயேசுவிடம் வாருங்கள். கர்த்தாவே, இன்று என் கண்களை திறந்தருளும்.

working-with-jesus

இயேசுவோடு கிரியை செய்வது – யோவான் 9: 4-5 – நாம் பகற்காலமிருக்குமட்டும் கர்த்தரின் கிரியையை செய்ய வேண்டும் என்றார் இயேசு. 1) வெளிச்சம் இருக்கும் போதே கர்த்தருக்காக கிரியை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். கொஞ்சகாலமே இருப்பதால் கர்த்தரின் கிரியை தள்ளி வைக்க முடியாது. தேவனோடு உள்ள நேரமும், தேவனுடைய நேரமும் தவிர மற்ற எல்லாம் வாழ்க்கையில் காத்திருக்கும். 2) இயேசு ‘நாம் கண்டிப்பாக கிரியை செய்யவேண்டும்’ என நம்மை அழைக்கிறார் என்ன ஒரு அருமையான காரியம்! தேவனுடைய மகிமைக்காக நீங்களும் இயேசுவும் இணைந்து கிரியை செய்ய வேண்டும். நண்பனே, நாம் விரும்பினாலும் கிரியை செய்ய முடியாத இராக்காலம் வருகிறது.

why-suffering

ஏன் பாடுகள்? – யோவான் 9: 1-3 – பிறந்ததிலிருந்தே அந்த பார்வையற்ற மனிதன் கஷ்டப்பட்டான். அவனது பாவத்தினால்தான் என ஜனங்கள் குற்றம்சாட்டினர். ஆனால் பார்வையற்ற அவன் மூலமாக கர்த்தர் கிரியை செய்வார் என இயேசு சொன்னார். ஆகையால், பாடுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? உங்களது பாடுகள் கர்த்தருக்கு மகிமையை கொண்டுவருமா. நாம் நன்மையானதை செய்து பாடுபடும்போது, இயேசுவின் பங்காளிகள் ஆகிறோம். எதிர்த்து போராடாமல் எல்லாவற்றையம் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து பொறுமையோடு சகிக்க அவர் நமக்கு ஒரு மாதிரியாக உள்ளார். 1பேதுரு 2: 21-24 சிறிது நேரம் செலவழித்து படித்து நீங்கள் கற்றுக்கொண்டதை எனக்கு தெரியப்படுத்துங்கள்.

jesus-for-you

உனக்காக இயேசு – யோவான் 8: 56-59 – இயேசு”ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்றார். இயேசுவைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள எபிரேயர் 7: 24, 25 ஐ படியுங்கள். இயேசுவின் மூலமாக கர்த்தரிடம் வருபவர்களை அவர் இரட்சிக்க வல்லவர். ஏனென்றால் நமக்காக பரிந்து பேச இயேசு இன்றும் ஜீவிக்கிறார். ஒரு வேளை,சாத்தான் உங்களை கீழே இழுத்து சோர்புக்குள்ளாக்கலாம். ஆனால், இயேசு இப்பொழுதும் எப்பொழுதும் நமக்காக பரிந்து பேசுகிறார் எனவே நாம் சோர்ந்து போக வேண்டியதில்லை. நாம் இயேசுவின் சொந்தமாக இருக்கும் போது சாத்தான் தரும் எல்லா மனச்சோர்புகளும் தோற்கடிக்கப்படும்.

know-and-obey

அறிந்து கீழ்படிதல் – யோவான் 8: 54-55 – இயேசு ‘நான் என் பிதாவை அறிந்து அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்திருக்கிறேன்’ என்றார். கர்த்தரை அறிவதும் அவருக்கு கீழ்படிவதும் பிரிக்க முடியாதது. கர்த்தரை எனக்கு தெரியும் எனவே, நான் கிறிஸ்தவன் என சொல்வது எளிது. நாம் கிறிஸ்தவர்கள் மேலும், நாம் கர்த்தருக்கு கீழ்படிபவர்கள் என்பது அதை விட சிறந்தது. என்னுடையதை விட கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே கீழ்படிதல் ஆகும். இன்று, நீங்கள் அநேக காரியங்களை செய்ய, நினைக்க (அ) சொல்ல போகிறீர்கள். அதை நமது சுயத்தை விட கர்த்தரின் விருப்பத்தின் அடிப்படையில் செய்ய முடியுமா? கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்ற அவருடைய கிருபை கிடைக்கும்படி நான் ஜெபிக்கிறேன்.

spiritual-death

ஆவிக்குரிய மரணம் – யோவான் 8: 52-53 – இயேசு ஆவிக்குரிய மரணத்திற்கு நேராக வழிநடத்துகிற பாவத்தை குறித்து பேசுகிறார். ஆனால் சரீரத்தின் மரணம் என ஜனங்கள் புரிந்து கொண்டனர். ஆவிக்குரிய மரணம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முற்றிலும் எதிரானது. ஆவிக்குரிய வாழ்க்கை என்பது கர்த்தருடைய பிரசன்னத்தில் நிலையான ஐக்கியம் வைத்திருப்பதாகும். ஆவிக்குரிய மரணம் என்பது ஆண்டவருடைய பிரசன்னத்தின் ஐக்கியத்தை உடைப்பதாகும். கோபம், கசப்பு, பெருமை போன்ற பாவங்கள் கரத்தருடைய பிரசன்னத்திலிருந்து பிரிக்க காரணமாகிவிடுகிறது. நீங்கள் ஒருவர் மேல் கோபமாக இருக்கும் போது, கர்த்தருடைய குணம் உங்களிலிருந்து தவறுவதை கவனித்திருக்கிறீர்களா?

avoiding-death

மரணத்தை தவிர்ப்பது – யோவான் 8: 51 – இயேசு”ஒருவன் என் வார்த்தைக்கு கீழ்படிந்தால் அவன் ஒருபோதும் மரணத்தை காண்பதில்லை”என்றார். கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு நான் கீழ்படியும் போது என் ஆத்துமா மரணத்தை காண்பதில்லை. ஆகையால் எப்பொழுது நான் என் சுய சித்தத்தை தெரிந்து கொண்டு கீழ்படியாமல் போனால்,என் ஆத்துமா மரித்து நான் தொலைந்து போவேன் (லூக்கா 15: 24). ஆகையால் நண்பனே, தினமும் ஜீவனுக்கும், மரணத்திற்குமான சோதனைகளின் வழியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். சோதனைகளின் நடுவிலும் தனிப்பட்ட ஜெபத்தின் மூலம் என்னால் பாவத்தை மேற்கொள்ள முடியும். இயேசுவும் அதையே செய்து பாவத்தை மேற்கொள்ள நமக்கு ஒரு மாதிரியாக உள்ளார் (லூக்கா 22: 46).

bless-when-cursed-copy

சபிக்கும் போது ஆசீர்வாதம் – யோவான் 8:48-50 – இயேசுவை “பிசாசு பிடித்தவன் தாழ்ந்த ஜாதி மனிதன்”என ஜனங்கள் சொன்னார்கள். அவரை தவறாக பேசிய ஜனங்ளுக்கு இயேசு சொன்ன பதிலை நாம் கற்று கொள்ள வேண்டும். இயேசு “உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” (லூக்கா 6: 28) என்றார். அதாவது ஒருவர் உங்களை சபிக்கும் போது, உங்கள் முழு இருதயத்தோடு அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். அவர்கள் ஆசீர்வாதமானவர்களாக மாற வேண்டும். ஆசீர்வதிப்பது என்பது கடினம் என நீங்கள் நினைக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகையின் கீழ் இருக்கும் போது மட்டுமே இது முடியும். விடுதலைக்கு சங்கீதம்120: 2 தாவீதின் ஜெபத்தை பாருங்கள்.

truth-lasts

சத்தியத்திற்கு முடிவில்லை – யோவான் 8:45-47 – பிசாசின் பொய்களை அவரது சத்தியத்தோடு இயேசு ஒப்பிட்டார். ‘நான் சத்தியத்தை பேசினால் நீங்கள் ஏன் விசுவாசிக்கவில்லை?’என அவர் கேட்டார். சிலநேரங்களில் இயேசுவின் சத்தியம் படிப்பதற்கு எளிதாக இருக்கும் ஆனால், பின்பற்ற கடினமாக இருக்கும். ஆனால்,பிசாசின் பொய்கள் உடனே மகிழ்ச்சி தருவது போன்ற கவர்ச்சியான மாறுவேஷமாக இருக்கிறது. ஆகவே நம்முடைய வாழ்வில் காணப்படும் ஆவிக்குரிய யுத்தம் – அந்த நிமிடம் மட்டும் திருப்தியை தரும் ஆனால், கர்த்தருக்கு மகிமை தராத மாம்சத்தின் காரியங்கள் /மற்றும்/ முடிவில்லாத திருப்தி, அன்பு, சந்தோஷம் மற்றும் சமாதானத்தை தரும் பரிசுத்த ஆவியானவரின் காரியங்கள்.

deceived-no-more

இனியும் ஏமாறாதே – யோவான் 8:44 – பிசாசை கொலைகாரன், பொய்க்கு தகப்பன் என இயேசு சொன்னார். நமது ஆத்துமாவை கொல்ல விரும்புவதால் அவன் கொலைகாரன். கெட்டதை நல்லது என்றும் நல்லதை கெட்டது என்றும் அவன் சொல்வதால் பொய்காரன். அநேகர் ஏமாற்றுகாரனான அவனது திட்டங்களில் விழுந்துள்ளனர். உங்கள் வாழ்வில் எந்த பகுதியில் அவன் உங்களை ஏமாற்றி உள்ளான் (ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்) என யோசித்து பார்க்க முடியுமா? நண்பனே, இனியும் அவனால் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை.ஏனென்றால், நமக்கு எதிரானவனை விட பெரியவர் நமக்காக இருக்கிறார். பிசாசானவனின் பொய்களை கிறிஸ்து மட்டுமே நமக்கு வெளிப்படுத்த முடியும்.

listen-to-god

கர்த்தருக்கு செவிகொடுங்கள் – யோவான் 8:42-43 – ‘நீங்கள் கேட்கவில்லை எனவே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை’ என்றார் இயேசு. இன்று நீங்கள் எந்த சத்தத்தை கேட்கிறீர்கள்? உங்கள் நண்பர்கள், உங்கள் மனசாட்சி, சமூக ஊடகங்கள் (அ) சாத்தான் இவர்களின் சத்தமா? நீங்கள்/ நான் கர்த்தரின் சத்தத்தை கேட்பதற்காக எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்? இயேசு மிகச் சரியாக சொன்னார், நான் கர்த்தரின் காரியங்களை அறிந்து கொள்ள முடியவில்லை ஏனென்றால் நான் கேட்பதற்கு நேரம் கொடுப்பதில்லை. வேதத்தை படித்து, தனி ஜெபத்தில் நேரம் செலவிட்டு அதன் மூலமாக கர்த்தர் பேசுவதை கேட்க நேரம் ஒதுக்கலாமா?

group-or-personel-faith

தனிபட்ட விசுவாசமா (அ) குழு விசுவாசமா? – யோவான் 8:39-41 – “நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் மற்றும் தேவனின் பிள்ளைகள்” என ஜனங்கள் சொன்னார்கள். ஆனால், இயேசுவை கொலை செய்ய விரும்பினார்கள். நாம் நல்ல குடும்பத்திலோ, நல்ல சபையிலோ உறுப்பினராக இருக்கலாம், ஆனால் இவைகள் நம்மை இரட்சிக்காது. இயேசுவின் மேல் வைத்த தனிப்பட்ட விசுவாசத்தினாலேயே நாம் இரட்சிக்கப்பட்டோம். கர்த்தாவே, நான் அநேக நல்ல குழுக்களில் இணைந்துள்ளேன் ஆனால், ஒவ்வொரு நிமிடமும் தனிப்பட்ட முறையில் உம்மை பின்பற்ற விரும்புகிறேன். இன்று, என் விசுவாசத்தை பலப்படுத்துங்க,அப்பொழுது எனது தனிபட்ட வாழ்வின் நினைவுகளும்,செயல்களும் உமக்கு மகிமை கொண்டுவர முடியும்.

has-it-entered

வசனம் உள்ளே சென்றுள்ளதா? – யோவான் 8:37-38 – “என் வார்த்தைகள் உங்களில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை”என இயேசு அவரை பின்பற்றாதவர்களிடம் சொன்னார். ஆண்டவருடைய வார்த்தை உங்கள் வாழ்க்கை முறையில் முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளதா? சுயநல நடத்தையிலிருந்து சுயநலமற்ற நடத்தைக்கு முன்னேற்றம். இருளின் ஆவியிலிருந்து வெளிச்சத்திற்கு முன்னேற்றம். இன்று சங்கீதம் 119:130 ஐ படியுங்கள். நெருப்பை உண்டாக்க வெப்பம், எரிபொருள், உராய்வு எல்லாம் நமக்கு தேவை. கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேற, பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்படிவது அவசியம்.. உங்கள் வார்த்தைகள் வெளிச்சத்தை கொண்டுவருவதாக இருக்கட்டும்.

true-freedom

உண்மையான விடுதலை – யோவான் 8:35-36 – ‘குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்’ என இயேசு சொன்னார். எனக்கு முழுமையான மற்றும் உண்மையான விடுதலையை தர இயேசு விரும்புகிறார். எ.கா – ஒரு சின்ன கூண்டில் உள்ள பறவையை பெரிய கூண்டிற்கு மாற்றலாம் ஆனால்,அது முழுமையான விடுதலை இல்லை. நம்மை அசைய விடாமல் உள்ள கட்டுகளை உடைக்க இயேசு வந்தார். உங்கள் வாழ்வில் ஏதாவதுஒரு பகுதியில் முழுமையான விடுதலை தேவையா? சிறிய பேப்பரை எடுத்து எழுதுங்கள். உங்களை விடுதலையாக்க வேண்டுமென இயேசுவிடம் ஜெபியுங்கள். கர்த்தாவே, முழு விடுதலைக்காக உம்மிடம் வந்துள்ளேன்.

sins-slaves

பாவத்திற்கு அடிமை – யோவான் 8:34 – ஜனங்கள் அவர்கள் விடுதலையாக இருக்கிறோம் என சொன்னபோது, பாவம் செய்தவன் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான் என இயேசு தெளிவாக சொன்னார். பாவம் வெளிப்படையாக விடுதலையை கொடுக்கிறது ஆனால், உள்ளாக அடிமைபடுத்துகிறது. என்னை அடிமைதனத்திலிருந்து விடுவித்து உள்ளான விடுதலையை தர இயேசு வந்தார் (ரோமர் 6: 6). விடுதலை என நம்மை ஏமாற்றுகிற எல்லா பாவத்தின் அடிமைதனத்திலிருந்து கர்த்தர் நம்மை விடுவிக்க வேண்டுமென ஜெபிக்கிறேன். எ.கா – நமக்கு விடுதலை தரும் என நினைத்த நமது வேலை (தொழில்) நம்மை சுயநலமாகவோ, பெருமையாகவோ அல்லது தேவனுக்கு தரவேண்டிய நேரத்தை எடுத்து கொள்வதாகவோ மாறிவிடுகிறது.

desire-to-be-free

விடுதலையாக ஆசை – யோவான் – 8:33 – தீமையான பழக்கங்கள், அடிமைதனம் (அ) நடத்தை ஆகியவற்றில் கட்டப்பட்டிருப்பதை ஒத்துக்கொள்வதே விடுதலையின் முதல்படி ஆகும். நாங்கள் நன்றாக இருக்கிறோம் என ஜனங்கள் இயேசுவிடம் வாதாடுகின்றனர். லூக்கா 5: 30-32, இயேசு ஆவியில் பலவீனமானவர்களுக்கு டாக்டராக இருக்கிறார். நேர்மையாக இயேசுவோடு உட்கார்ந்து நமது கட்டுகளை சொல்ல முடியுமா? அவர் மட்டுமே சரீர மற்றும் மனதின் பலவீனத்தை குணமாக்க முடியும். இன்னும் காத்திருக்க வேண்டாம் (அ) விடுதலை பெற வேறு வழிகளை தேட வேண்டாம். கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும்.

knowing-jesus

இயேசுவை தெரிந்துகொள்ளுதல் – யோவான் – 8:32b – இயேசு சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். சத்தியத்தை அறிந்துகொள்ளுதல் என்பதின் அர்த்தம் என்ன? அதாவது, 1) இயேசுவைப்பற்றி படித்து மட்டுமல்ல, அவரது அன்பையும், கிருபையையும் அனுபவித்து இயேசுவை தெரிந்து கொள்வது. 2) என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தினமும் சத்தியத்தை தெரிந்து கொள்ள இயேசுவிடம் வருவது. 3) என்னை விடுதலையாக்குகிற இயேசுவையும் அவரது செயல்களையும் நெருக்கமாக அறிந்து கொள்வதே என்னுடைய வேலை. நண்பனே, இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு நாளும் நீங்கள் விடுதலையாவதை காண்பீர்கள். என்ன ஒரு மகிமையான வாழ்வு !!!

want-to-be-set-free

விடுதலையாக விரும்புகிறாயா? – யோவான் 8:32 – சீஷர்கள் தனிப்பட்ட முறையில் இயேசுவை சத்தியமாக அறிந்து கொண்ட போது, சிறை வாழ்விலிருந்தும் கட்டுகளிலிருந்தும் விடுதலை பெற்றனர். ஏன்? ஏனென்றால், சாத்தானின் ஒடுக்கு முறையிலும்,அழுத்தத்திலும் பிடிக்கப்பட்டவர்களையும், உலக காரியங்களிலும், கவலையிலும் சிக்கியுள்ளவர்களை விடுதலை பண்ணவும் இயேசு வந்தார் (ஏசாயா 61: 1b). சத்தியமாகிய இயேசு மட்டுமே நம்மை விடுதலை செய்ய முடியும். கர்த்தாவே, என்னை கட்டுகளில் வைத்துள்ள தெரிந்த மற்றும் தெரியாத காரியங்களை எனக்கு காட்டுங்க. எனக்கு முழு விடுதலை வேண்டும். நான் முழுவதும் விடுதலை அடையும் வரை தொடர்ந்து உம்மிடம் வரவேண்டும்.

Scene 07/53 Exterior Galilee Riverside; Jesus (DIOGO MORCALDO) is going to die and tells Peter (DARWIN SHAW) and the other disciples this not the end.

சீஷரா அல்லது விசுவாசியா? – யோவான் 8:31 -நாம் இயேசுவிடம் முதலாவதாக வரும் போது விசுவாசிகளாக இருக்கிறோம். ஆனால் நாம் தொடர்ந்து இயேசுவில் இருக்கும் போது அவரது சீஷராகிறோம். லூக்கா14: 25-35 ஐ வாசித்து சீஷராக இருப்பதை குறித்து இயேசு கூறுவதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சீஷன் தனது குடும்பத்தை விட கர்த்தரை அதிகம் நேசிப்பான், பாடுகளின் சிலுவையை சுமப்பான், அவனுக்குரிய எல்லாவற்றையும் இயேசுவிற்காக கொடுப்பான். இயேசுவின் இந்த வார்த்தைகள் கடினமாக இருக்கலாம். ஆனால், சீஷனாக இருக்க தேவையான பலத்தை அவர் தருவார். கர்த்தர் இன்று சீஷர்களை தேடுகிறார். அவர் உங்களையும் ஒரு சீஷனாக சேர்க்க முடியுமா?

obedience-of-jesus

இயேசுவின் கீழ்படிதல் – யோவான் 8:28-30 – இயேசு “பிதாவுக்கு பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்”என்றார். இங்கு எப்பொழுதும் என்பது மிக முக்கியமான வார்த்தை. சில நேரங்களில் மட்டுமல்ல அல்லது கீழ்படிவதற்கு வசதியான போது மட்டுமல்ல. ஆனால், ஜனங்கள் எதிர்த்தபோதும், அவர் சோர்வான போதும், அவர் சோதிக்கப்படும் போதும், அவருக்கு விருப்பமில்லாத போதும் என இயேசு எப்பொழுதும் பிதாவிற்கு கீழ்படிந்திருந்தார். உங்களுடைய வாழ்வில் கர்த்தரை பிரியபடுத்த முடியாமல் போன நாட்கள் உள்ளதா? அவருக்கு எப்பொழுதும் கீழ்படிய தேவையான பலத்தை தரும்படி கர்த்தரிடம் கேட்போம். அப்பொழுது நமது வாழ்க்கையின் மூலம் அவர் மகிமைபட முடியும்.

how-to-speak

எப்படி பேசுவது ?- யோவான் 8: 26-27 – இயேசுவிற்கு பேசுவதற்கு அநேக காரியங்கள் இருந்தது. ஆனால்,பிதா என்ன பேச விரும்பினாரா அதை மட்டும் பேசினார். நாம் எப்படி? கர்த்தருடைய ஆவியானவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதை மட்டும் பேச இயேசுவிடமிருந்து கற்று கொள்வோம். கர்த்தாவே, என்னுடைய பேச்சை கிருபை, அன்பு, மற்றும் இரக்கத்தினால் நிறைந்ததாக மாற்றும்படி ஜெபிக்கிறேன். நான் கேட்பதற்கு விரைவாகவும், பேசுவதற்கு தாமதமாகவும் இருக்க உதவும் (யாக்கோபு 1: 19) . என்னுடைய வார்த்தைகள் உமது இருதயத்தை பிரதிபலிப்பதாக காணப்பட வேண்டும். காயப்படுத்துவதாக இல்லை தேற்றுவதாகவும், பிரிவினையை அல்ல சமாதானத்தை தருவதாகவும், குறைகூறாமல் நன்றி உள்ளதாகவும் இருக்க வேண்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

words-of-love

அன்பின் வார்த்தைகள் – யோவான் 8:24 – இயேசு”நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்”என்றார். ஆத்துமாக்களின் சாவை பற்றிய இந்த வார்த்தைகளை பேச இயேசுவிற்கு மட்டுமே உரிமை உள்ளது. ஏனென்றால் அவர் எனக்காக மரித்து எனக்காக பாவமானார். இந்த எச்சரிப்பின் வார்த்தைகள் அவர் என் ஆத்துமாவில் வைத்துள்ள உயர்ந்த அன்பையும்,அக்கறையையும் காட்டுகிறது. ஏனென்றால், பிசாசானவன் “நீங்கள் சாகவே சாவதில்லை”(ஆதியாகமம் 3: 4) என்று ஜனங்களை வஞ்சிக்கிறான். உதாரணமாக,அவன் பாவம் மகிழ்ச்சியானது என்பான்; ஆனால்,அதன் முடிவினை சொல்லமாட்டான். இயேசுவின் வார்த்தைகளுக்கு மட்டும் செவி கொடுப்போம்.

heavenly-life

பரலோக வாழ்க்கை – யோவான் 8: 23 – இயேசு அவிசுவாசிகளிடம் “நீங்கள் இந்த உலகத்திற்குள்ளவர்கள், நான் இந்த உலகத்திற்குரியவன் இல்லை”என்றார். ஏனென்றால்,இந்த உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போகுமென்பது நமக்கு தெரியும் ( 1யோவான் 2:15-17 தியானியுங்கள்). நண்பனே, இந்த உலகத்தின் பொருட்களை இறுக்க பிடித்துகொள்ளாதீர்கள். நமது ஆத்துமா இந்த உலகத்திற்காக உண்டாக்கப்பட்டதல்ல. கர்த்தாவே, நான் இந்த உலக்கத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக பற்றுகொள்ள வேண்டும். 10 பைகளுக்கு பதிலாக 1 பையை சுமந்து செல்லும் பயணியை போல….

livig-with-christ

கிறிஸ்துவுடன் வாழ்வது – யோவான் 8: 21-22 – “நான் போகும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது”என இயேசு அவிசுவாசிகளிடம் சொன்னார். நான் ஒரு நிமிடம் கூட இயேசுவின் பிரசன்னத்திலிருந்து விலகி இருக்க விரும்பவில்லை. யோவான் 14:1,2 ஐ மெதுவாக படியுங்கள் – இது இயேசுவை பின்பற்றுபவர்களுக்குகான மிகப் பெரிய வாக்குதத்தம். நீங்களும் நானும் அவரோடு நித்திய நித்தியமாக இருப்பதற்கு அவர் ஒரு இடத்தை ஆயத்தம் செய்துள்ளார். கர்த்தாவே, நீர் எனக்கு ஒரு இடத்தை ஆயத்தம் செய்திருப்பது போல, நான் இந்த உலகத்தில் இருக்கும் போது என் முழு இருதயத்தோடும் உம்மை தொழுது கொள்ள வேண்டும்.

personal-prayer

இன்று தனி ஜெபத்தில் சிறிது நேரம் செலவிடுவோம். இந்த தின தியானங்கள் நமது வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானல் அதற்கு ஜெபம் மிகவும் அவசியம். ஜெபிப்பது என்றால், நான் ஜெபிக்கும் போது என் சொந்த உணர்வுகளை நம்பவில்லை. ஆனால்,என்னை முழுவதும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறேன் என்பதாகும். அப்பொழுது அவர் என்னை பொறுப்பெடுத்துக்கொள்வார். ஏனென்றால், நான் விலைக்கு வாங்கப்பெற்றேன் ( விலையேறப்பெற்ற இயேசுவின் இரத்தத்தால்) என்னுடைய சரீரம் எனக்கு சொந்தமில்லை (1 கொரிந்தியர் 6:19,20). இன்று ஒரு அமைதியான இடத்தை தெரிந்தெடுத்து ஜெபித்து ஆண்டவர் பேசுவதை கவனியுங்கள். நீங்கள் கற்றுக்கொண்டதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

know-god

கர்த்தரை தெரிந்துகொள்ளுங்கள் – யோவான் 8: 19-20 – இயேசு “என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்து கொள்வீர்கள்” என்றார். வாழ்வின் மிகப்பெரிய ஆசீர்வாதம் கர்த்தரின் அன்பையும், கிருபையையும் அனுபவிப்பதாகும். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பார்ப்பதோடு திருப்தி ஆகிவிடாதீர்கள். எ.கா- ஒரு தண்ணீர் தொட்டி நீரை பிறருக்கு கொடுப்பதை போல, கர்த்தரிடமிருந்து பெற்ற அன்பை நாமும் மற்றவர்களிடம் கொடுக்க வேண்டுமென ஜெபியுங்கள். ஏனென்றால், நாம் எல்லா இருளின் பிடியிலிருந்து விடுதலை பெற அவரையே தியாகம் செய்த ஜீவ நதியிலிருந்து நாம் தண்ணீரை பெறுகிறோம். அவர் முதலில் நம்மிடத்தில் அன்பு கூர்ந்ததால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்.

dont-judge

நியாயம் தீர்க்காதேயுங்கள் – யோவான் 8: 15-18 – “என்னுடைய நியாயத்தீர்ப்பு சத்தியமாயிருக்கிறது” என்றார் இயேசு. ஆனால் மதத்தை பின்பற்றும் ஜனங்கள் இயேசுவை தவறாக நியாயம் தீர்த்தனர். நம் வாழ்வில் காணப்படும் ஒரு போராட்டம் நாம் ஜனங்களை சீக்கிரம் தவறாக நியாயந்தீர்த்துவிடுவோம். 1 கொரிந்தியர் 4 : 5 -ல் கர்த்தர் ஜனங்களின் நோக்கத்தை நியாயந்தீர்க்கும்வரை காத்திருங்கள் ஆனால்,மற்றவர்களை நியாயந்தீர்காதீர்கள். ஆகவே நாம் ஜனங்களை நியாயந்தீர்க்காமல் இருக்கவும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாள் வரைக்கும் பொறுமையோடு காத்திருக்கவும் அவருடைய கிருபை அவசியம் தேவை. ஞாபகம்வைத்துக்கொள்ளுங்கள், இயேசு நம்மை நியாயந்தீர்க்கவில்லை ஆனால் நம்மை இரட்சித்துள்ளார் ஆகவே நாமும் நியாயந்தீப்பதில்லை.

walk-in-light

ஒளியில் நடங்கள் – யோவான் 8: 13,14 – இயேசுவே அவர்களுடைய ஒளி என மதத்தை பின்பற்றும் ஜனங்கள் நம்பவில்லை. அவர்களது சொந்த வழிகளை நம்பினர். நமக்கு 2 தெரிந்தெடுப்பு உள்ளது. 1) நமது விருப்பத்தையும், ஆசையையும் நாமே கட்டுப்படுத்துவது 2) நமது விருப்பத்தையும், முடிவுகளையும் இயேசு கட்டுபடுத்துவது. ஏனென்றால், நாம் நமது சொந்த வழிகளிலேயே பழகியதால் இயேசுவை பின்பற்றுவது மிகவும் கடினம். அழுக்கு துணிகளை துவைத்து சூரிய ஒளியில் வைப்பதைபோல, நமது விருப்பங்களும், முடிவுகளும் இயேசுவின் ஒளியின் ஆளுகைக்கு வர வேண்டும்.

follow-the-light

ஒளியை பின்பற்றுங்கள் – யோவான் 8: 12b – இயேசு “என்னை பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை பெற்றிருப்பான்” என்றார். நேற்று பார்த்தது போல்,நாம் இயேசுவை பின்பற்றுவதை இந்த உலகத்தின் கடவுளானவன் தடை செய்கிறான். தேவனோடு செலவிடும் நமது தனிபட்ட ஜெப நேரத்தையும்,அவருடைய வார்த்தையை படிக்கும் நேரத்தையும் அவன் நிறுத்த முயற்சி செய்கிறான். மற்ற விசுவாசிகளோடு நேரம் செலவழிப்பதையும் தடை செய்கிறான். இயேசுவை பின்பற்றுவதிலிருந்து நம்மை திசை திருப்பும் இருளின் கிரியைகளோடு போராட பலன்தரும்படி கர்த்தரிடம் கேட்போம். வாருங்கள், இன்றே இயேசுவோடு நேரம் செலவழிப்போம்.

do-yo-see-the-light-copy

நீ வெளிசத்தை பார்க்கிறாயா? – யோவான் 8:12a – இயேசு “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றார். இயேசுவாகிய ஒளி எனக்கு சரியான வழியை காட்டி, அநேக பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது. ஆனால், இயேசுவின் ஒளியை பார்க்க முடியாமல் ஒருவன் தடுக்கிறான் (2 கொரிந்தியர் 4: 4). அவன் இந்த உலகத்தின் அதிபதி என அழைக்கப்படுகிறான்.கர்த்தரின் ஜனங்களை இயேசுவின் ஒளியை பார்க்கவிடாமல் குருடாக்குவது அவனது வேலை. உலகத்தின் பொருட்களும், உங்கள் ஒய்வில்லாத நேரமும் (பிஸி) இயேசுவின் ஒளியின் மகிமையை பார்க்கவிடாமல் உங்கள் கண்களை குருடாக்க கூடாது என நான் ஜெபிக்கிறேன்.

how-to-sin-no-more

எப்படி பாவம் செய்யாமலிருக்கலாம்? – யோவான் 8: 10-11 -” நீ போ இனி பாவம் செய்யாதே”என இயேசு கூறினார். “இனி பாவம் செய்யாதே” என்றால் என்ன? அதாவது அவளது வாழ்க்கையை மாற்ற இயேசு உற்சாகபடுத்துகிறார். இயேசு அவளது கடந்த கால வாழ்க்கையை குற்றப்படுத்தவில்லை. ஆனால்,விசுவாசத்தோடு முன் செல்ல உற்சாகபடுத்துகிறார். இன்று நாம் கிறிஸ்துவிற்குள் இருந்தால் நமக்கு ஆக்கினை தீர்ப்பில்லை (ரோமர் 8: 1) ஆனால் அவருடைய கிருபையினால் பாவத்தை மேற்கொள்ள தேவையான பெலத்தை பெற முடியும் (ரோமர் 6 :14). உங்களை முன்செல்ல விடாமல் உங்கள் கடந்த கால வாழ்க்கை தடுக்கிறதா?உடனடியாக,அதை மேற்கொள்ள உதவும் இயேசுவை நோக்கி பாருங்கள்.

obeying-conscience

கீழ்படியும் மனசாட்சி – யோவான் 8:9 – கல்லை கீழே போட்டவர்கள் கடின இருதயமுள்ள ஜனங்கள். ஏன்? அவர்கள் மென்மையான மனசாட்சி கொண்டவர்கள். தேவனுடைய பிள்ளைகளாகிய நமது மனசாட்சி தேவ ஆவியினாலும், அன்பினாலும் சுற்றப்பட்டதாயிருக்க வேண்டும். அப்பொழுது பைபிள் மற்றும் ஜெபத்தில் கர்த்தர் பேசும் போது வெறுப்பின் கல்லை கீழே போட்டு உடனடியாக மனந்திரும்ப முடியும். அதனால் மென்மையான மனசாட்சிக்காக மட்டுமல்ல அதில் கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படவும் ஜெபியுங்கள். இதுவே கீழ்படிதலுள்ள மகிழ்ச்சியான வாழ்வின் ஆரம்பம். ஆமென்.

drop-the-stone

கல்லை கைவிடுவோம் – யோவான் 8: 7-8 – இயேசு பாவமில்லாதவராயிருந்தும் அந்த ஸ்திரீயை கல் எறியவில்லை. நமக்கு நேசிக்க ஒரு காரணம் உள்ளது ஆனால், ஒருவரை குற்றஞ்சாட்டவும், வெறுக்கவும் நமக்கு 1000 காரணங்கள் உள்ளது. இயேசுவின் ஆவியையுடைய ஜனங்களாகிய நாம் எப்படி எறிவதற்கு கல்லை எடுக்க முடியும்? கல்லை எறிவது எனது இரட்சகரின் இருதயம் அல்ல. அதனால் என்னை யார் வெறுத்தாலும், எனது உணர்வுகளை காயப்படுத்தினாலும் நான் எடுக்கவோ (அ) எறியவோ மாட்டேன். கர்த்தாவே, உமது இருதயத்தை அறியவும்,உம்முடைய அன்பில் தங்கியிருக்கவும் எனக்கு உதவும்.

accuser-or-forgiver

மன்னிப்பவரா (அ) குற்றம்சாட்டுபவரா – யோவான் 8: 3-6 – இங்கு விபசாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை மதத்தை பின்பற்றும் ஜனங்கள் குற்றஞ்சுமத்துவதை பார்க்கலாம். குற்றஞ்சுமத்தும் ஆவியால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மற்றவர்கள் எப்பொழுதும் கெட்டவர்கள் என எண்ணிக்கொண்டு,அவர்களிடம் என்ன குற்றம் உள்ளது என கண்டுபிடிக்க முயற்சி செய்வர். சாத்தான் இரவும் பகலும் ஜனங்களை குற்றஞ்சாட்டுகிறான் (வெளிப்படுத்தல்12: 10). நமக்கு இயேசுவின் மன்னிக்கும் ஆவியே வேண்டுமே அல்லாமல் பிறரை குற்றப்படுத்தும் ஆவி வேண்டாம். கர்த்தாவே, இன்றே எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு மற்றவர்கள் மேல் குற்றம் கண்டுபிடிப்பதை நிறுத்த உதவும். எனக்கு உமது அன்பின் இருதயத்தை தாரும்.

listen

இயேசுவை கவனியுங்கள் – யோவான் 8: 1-2 – எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அதிகாலையில் இயேசு உட்கார்ந்து ஜனங்களுக்கு பிரசங்கம் செய்ய உட்காந்தார். இது மாணவர்கள் வகுப்புக்கு வரவில்லை ஆனால்,ஆசிரியர் வகுப்பறைக்கு வந்ததை போல் உள்ளது. நாம் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள எப்பொழுதும் ஆயத்தமாயிருப்போம். நமது விருப்பத்தை தியாகம் செய்யவும், சுயநலத்திலிருந்து விடுதலை பெறவும், பிறரை எதிர்பார்ப்பில்லாமல் நேசிக்கவும் யார் நமக்கு கற்றுக்கொடுக்க முடியும்? இயேசு அநேக சத்தியங்களை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறார். இன்று சிறிது நேரம் ஒதுக்கி யோவான் 8 ஐ வாசித்து தேவனுடைய சத்தத்தை கவனியுங்கள். கர்த்தாவே, என் செவிகளை திறந்தருளும்.

spiritual-growth

ஆவிக்குரிய வளர்ச்சி – யோவான் 7: 50-53b – கிருபையில் வளர்வது என்றால் என்ன? உதாரணமாக, உங்கள் வாழ்வில் மற்றவரை நியாயமல்லாமல் தீர்ப்பு செய்த சில காரணங்களுக்காக நீங்கள் இரகசியமாக பெருமைபட்டிருக்கலாம். ஆனால்,இப்பொழுது கர்த்தர் உங்களுக்கு தாழ்மையை கற்றுதந்திருக்கலாம். நாம் மேன்மைபாராட்ட ஒன்றுமில்லை. ஏனென்றால் நாம் எல்லாவற்றையும் கர்த்தரிடமிருந்து பெற்றுள்ளோம். எனவே நாம் இப்பொழுது தாழ்மையாய் இருக்கிறோம் (1கொரிந்தியர் 4: 7). நாம் கர்த்தருக்காக பலன் கொடுக்கும்போது, நம் வாழ்வில் சரிசெய்ய வேண்டிய பகுதியில் அவர் கிரியை செய்வார். இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம் வாருங்கள் !!!

grow-dont-stand

நிற்காதேயுங்கள் வளருங்கள் – யோவான் 7:50-53a – நிக்கொதேமு ஜனங்கள் மத்தியில் இயேசுவிற்கு ஆதரவு அளித்தார்.முன்பு அவர் இரகசியமாக இயேசுவை பின்பற்றுபவராக இருந்தார். இயேசுவில் உள்ள விசுவாசத்தில் அவர் வளர்ந்து வருவதை நாம் காண்கிறோம். நம் வாழ்வில் வேலை,அறிவு,படிப்பு என எல்லாவற்றிலும் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.ஆனால்,கர்த்தரையும் அவரது இருதயத்தை தெரிந்து கொள்வதும் அதிகரிக்க வேண்டும்;இதுவே நம் வாழ்வில் மிகவும் முக்கியமானது.ஆவிக்குரிய வளர்ச்சி பற்றிய உதாரணத்தை நாம் நாளை பார்க்கலாம். இன்று,கர்த்தரை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ளவும் அவரது கிருபையில் பெருகவும் வேண்டுமென கொஞ்சநேரம் ஜெபியுங்கள்.ஆமென்.

follow-jesus-not-releigion

மதத்தை அல்ல இயேசுவை பின்பற்றுங்கள் – யோவான் 7:47-49 – “இந்த ஜனங்கள் வேதத்தை அறியவில்லை எனவே அவர்கள் சபிக்கப்பட்டவர்கள்”என இயேசுவை வெறுத்த பரிசேயர்கள் கூறினர். சம்பிரதாயங்களை தெரிந்து கொண்டு அவற்றை கடைபிடிப்பது மதத்தை பின்பற்றுவதாகும். ஆனால்,தனிப்பட்ட முறையில் இயேசுவை தெரிந்து கொள்வதே இயேசுவை பின்பற்றுவதாகும். உங்களுடைய வாழ்வில்,பாரம்பரிய சம்பிராதயத்திற்காக எதையாவது செய்கிறீர்களா?எ.கா: சம்பிராதயத்திற்காக கூட பைபிளை வாசிக்க முடியும். ஆனால் இயேசுவின் வார்த்தையை கேட்பதும்,அவருடைய இருதயத்தை அறிந்து கொள்வதும் இயேசுவை பின்பற்றுபவருக்கு ஒரு உற்சாகமான நேரமாகும்.

words-of-jesus

இயேசுவினுடைய வார்த்தைகள் – யோவான் 7:45-46 – “அவர் பேசுகிறது போல ஒருவரும் ஒருபோதும் பேசியதில்லை”என இயேசுவை கைது செய்ய விரும்பிய அதிகாரிகள் கூறினார்கள். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் ஒரு குழந்தை கூட புரிந்து கொள்ளும்படி எளிமையானது; மேலும்,இருதயங்களை மாற்றக்கூடிய வல்லமை உள்ளது. யோவான் 6:63 ல் இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு அவருடைய வார்த்தைகள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது என்றார். விசுவாசிப்பது என்றால் என்ன? நாம் தினமும் கேட்கும் ஆலோசனைகள்,நமது எண்ணங்களுக்கும் மேலாக இயேசுவின் வார்த்தைகளை நம்பி,அவரையே பின்பற்றுவது. இன்றே,வேகமாக வசனங்களை வாசிக்காமல் மெதுவாக வாசித்து,அவருடைய வார்த்தைகளில் தங்கியிருங்கள்.

who-is-jesus

இயேசு யார் ? – யோவான் 7: 40-44 – ஜனங்கள் இயேசுவை தீர்க்கதரிசி, நல்லவர் (அ) கிறிஸ்து என்றனர். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் இயேசு யார் ? அவர் நமது இரட்சகராகிய ஆண்டவர். என் பாவத்திலிருந்து என்னை மீட்டு இரட்சித்ததால் அவர் என் இரட்சகர். எல்லாவற்றிலும் முதலிடத்தை பெற என்னை வழிநடத்தும் என் கர்த்தர் (2 பேதுரு 3.18). அவர் என்னிடம் சொல்வதை நான் செய்வேன். அவர் எனக்கு கற்றுகொடுப்பதை கற்றுக்கொள்வேன். எங்கு என்னை வழிநடத்தினாலும் பின்பற்றுவேன். சுயநலம், குடும்பம் எல்லாவற்றை விட இயேசுவே முதலிடம் வகிக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

வேத அறிவு இல்லை இருதய மாற்றம் – யோவான் 7:40-43 – வேத அறிவு உள்ள மனிதர்கள் இயேசுவை சந்தேகப்பட்டனர். ஆனால்,தேவனுடைய வார்த்தையின் வல்லமை அவர்களுடைய வாழ்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அவர்களது வேத அறிவு தலைக்கு மட்டும். வேத வார்த்தைகள் நம் இருதயத்தில் கிரியை செய்யாமல் அதின் உண்மைகளை மட்டும் தெரிந்து கொள்வதினால் எந்த பயனுமில்லை. யாக்கோபு 2:19-“விசுவாசிக்கிறது நல்லது,பிசாசுகளும் விசுவாசித்து நடுங்குகின்றன” என்கிறது. கர்த்தாவே,உம்மை நெருக்கமாக அறிந்து கொண்டு நான் மாற என் இருதயம் அறிவடைய வேண்டும். உம்முடைய வார்த்தை என்னில் கிரியை செய்ய உம்முடைய கிருபையை தாரும்.

விசுவாசித்தால் பெறுவாய் – யோவான் 7:39 – இயேசு பரிசுத்த ஆவியானவரை ஜீவத்தண்ணீர் என குறிப்பிட்டு பேசினார். கிறிஸ்தவ வாழ்க்கையை 2 விதமாக வாழலாம் 1) சுயநல வாழ்விலிருந்து வெற்றி இல்லாத நமது சொந்த பலத்தால் வாழும் வாழ்க்கை. 2) பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்வதால், அவரது பலத்தால் நம் சுயநலத்திலிருந்து விடுதலை பெற்றவாழ்க்கை. இயேசு நம் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவரின் பலத்தால் வாழ வேண்டுமென எதிர்பார்க்கிறார். எனவே நான் உங்களுக்கு ஒரு தேற்றரவாளனை அனுப்புவேன் என்றார் (யோவான் 14: 16). அந்த பெலத்தை விசுவாசத்தினால் இன்றே பெற்றுக்கொள்ள வேண்டுமென ஜெபிக்கலாமா?

from-thirt-to-flowing

தாகத்திலிருந்து பொங்கிவழிவது – யோவான்7: 38b – நமது உணர்வு, ஆசை (அ)ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் இதன் அடிப்படையில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை வாழலாம். நாம் செங்குத்தான பாதையில் பயணம் செய்கிறோம். சைக்கிள் (சுயம்) மூலம் கஷ்டப்பட முடியும் அல்லது மோட்டார் சைக்கிள் (பரிசுத்த ஆவியானவர்) பயன்படுத்த முடியும். 2016 ல் பரிசுத்த ஆவியானவரின் அதிகாரத்திற்குள் நீங்கள் வாழ வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் மூலம் பிதாவோடு தனிப்பட்ட உறவுள்ள மகிழ்ச்சியான வாழ்க்கை. சிறியதோ (அ) பெரிய காரியமோ முழுவதும் ஆண்டவரிடம் அர்பணித்த ஆசீர்வாதமான வாழ்க்கை.